`மல்லையாவைப் போன்று 36 தொழிலதிபர்கள் தப்பிச்சுப் போயிருக்காங்க!' - கோர்ட்டில் போட்டுடைத்த அதிகாரி | 36 Business men like Vijaya Mallaya esacaped from India in recent years

வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (16/04/2019)

கடைசி தொடர்பு:16:37 (16/04/2019)

`மல்லையாவைப் போன்று 36 தொழிலதிபர்கள் தப்பிச்சுப் போயிருக்காங்க!' - கோர்ட்டில் போட்டுடைத்த அதிகாரி

இந்த 36 தொழிலதிபர்கள் யார்? இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல யார் யார் உறுதுணையாக இருந்தார்கள் என்பது மேற்கொண்டு விசாரித்தால்தான் தெரியவரும். ஆனால்

மத்திய அரசுத் துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், தனியாகப் பயணம் செய்ய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்னும் நிறுவனத்திடம் அரசு 3600 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு, அரசு சார்பாக ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம், காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது போடப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பா.ஜ.க, இதில் ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லி அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ததுடன், ஊழலுக்குத் துணைபோனவர்களைக் கைதும்செய்தார்கள்.

கைதுசெய்யப்பட்டவர்களுள் ஒருவரான சுரேஷ் மோன் குப்தா, தன்னை ஜாமீனில் வெளியிடக்கோரி மனு அளித்ததிருந்தார். அந்த மனுவில், எனக்கு சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது. அதைக் கெடுக்க வேண்டாம் என்கிற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார். பிறகு, அந்த மனுவுக்கு எதிராக அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் அதைக் குறிப்பிட்டுப் பேசியதுடன், நம் நாட்டில் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோருக்கும்தான் நல்ல மதிப்பு இருந்தது. அவர்கள் பணமோசடி செய்து நாட்டை விட்டு ஓடவில்லையா. அவர்கள் மட்டுமா... கடந்த சில வருடங்களில் அவர்களைப் போல தொழிலதிபர்கள்  36 பேர் நாட்டைவிட்டு தப்பித்துப் போயிருக்கிறார்கள்" என்றார்.

மல்லையா

கடந்த சில வருடங்களில், விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் மட்டும்தான் பணமோசடி செய்து நாட்டை விட்டுப் போயிருக்கிறார்கள் என்பது பெரும்பான்மை மக்களுக்குத் தெரியும். போகிறபோக்கில், வழக்கறிஞர் இதைச் சொல்லும்போதுதான்  36 பேர் தப்பித்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதுவும், குறிப்பிட்ட வழக்கறிஞர் அமலாக்கப்பிரிவைச் சார்ந்தவர் என்பதும், அவர் நீதிபதி முன்பு அதைக் கூறியிருக்கிறார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. இந்த 36 தொழிலதிபர்கள் யார். இவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்ல யார் யார் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மேற்கொண்டு விசாரித்தால்தான் தெரிய வரும். ஆனால், அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே!