`பலம், பலவீனம், மகிழ்ச்சி... எல்லாவற்றையும் சினிமாதான் கற்றுக்கொடுத்துச்சு!' - நடிகை கெளதமி | actress gautami talks about her personal and advice for cancer

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (16/04/2019)

கடைசி தொடர்பு:18:30 (16/04/2019)

`பலம், பலவீனம், மகிழ்ச்சி... எல்லாவற்றையும் சினிமாதான் கற்றுக்கொடுத்துச்சு!' - நடிகை கெளதமி

கெளதமி

``என்னுடைய பலம், பலவீனம், மகிழ்ச்சினு எல்லா விஷயங்களையும் சினிமாதான் கற்றுக்கொடுத்துச்சு. ஓய்வில்லாம நடிச்சாலும், ஒருபோதும் நடிக்க என்றைக்குமே எனக்குச் சலிப்பு ஏற்பட்டதில்லை. ஹீரோயினா கிராமத்துப் பெண் வேடங்கள்ல நடிச்சதில் ரொம்பவே மகிழ்ச்சி. நிறைய புகழைப் பார்த்தேன். பிறகு, கல்யாணம், குழந்தைனு எனக்கான தனிப்பட்ட வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சேன். பிறகு கேன்சர் ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டதெல்லாம் பெரிய அத்தியாயம். இப்போ நான் நடிக்கிறது குறைவாகவே இருக்கு. அதனால என் சினிமா பயணம் பற்றிய பேச்சுகள் குறைஞ்சுடுச்சு. கேன்சருக்கு எதிரான விழிப்புணர்வு செய்ற என் ஃபவுண்டேஷன் செய்திகள்தான் அதிகம் பேசப்படுது" என்கிற கெளதமி, கேன்சர் பாதிப்புள்ளவர்களுக்கு தன் அனுபவத்திலிருந்து ஆலோசனைக் கூறுகிறார். 

கெளதமி

``ஆண், பெண் வேறுபாடின்றி இன்னைக்கு எல்லாத் தரப்பினருக்கும் கேன்சர் வருது. எந்த ரூபத்தில், எந்த வயதில், உடலின் எந்தப் பாகத்தில் கேன்சர் உண்டாகும்னு கணிக்க முடியாது. அதனால் உடல்நல விஷயத்தில் எல்லோருமே ரொம்ப அக்கறையுடன் இருக்கணும். ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துக்கணும். ஒருவேளை கேன்சர் பாதிப்பு இருந்தால், கவலை படாம, குணமடைவதற்கு தேவையான முயற்சிகளில் உறுதியா செயல்படணும். இது மூடி மறைக்கும், வெளிப்படையா சொல்லத் தயங்கக்கூடிய விஷயமல்ல. நம்பிக்கையுடன் முறையான சிகிச்சைப் பெற்றால், கேன்சரில் இருந்து வெற்றி பெற முடியும். அப்படித்தான் நான் வெற்றி பெற்றேன்" என்று உறுதியாகக் கூறுகிறார், கெளதமி.

16 வயதில் சினிமா, எட்டு வருடங்கள்... 120 படங்கள், புற்றுநோயிலிருந்து போராடி வென்றேன், கண்ணீர் சிந்திய அந்த நாள், கமலும் நானும், ஸ்லிம் சீக்ரெட், நான் ரொம்ப சென்சிட்டிவ் உட்பட, தன் வாழ்க்கைப் பயணத்தை முழுமையாகப் பகிர்ந்திருக்கிறார், கெளதமி. அவள் விகடன், `எவர்கிரீன் நாயகிகள்' தொடரில். அந்தப் பேட்டியைப் படிக்க, ``வலிகளால் உணர்கிறேன் வாழ்க்கையை!" - இந்த டைட்டிலை கிளிக் செய்யவும்.