சாத்தூர் அ.ம.மு.க தேர்தல் அலுவலகத்தில் ரூ.43 லட்சம் பறிமுதல்! | 43 lakh rupees seized from sattur ammk election office

வெளியிடப்பட்ட நேரம்: 20:03 (17/04/2019)

கடைசி தொடர்பு:20:03 (17/04/2019)

சாத்தூர் அ.ம.மு.க தேர்தல் அலுவலகத்தில் ரூ.43 லட்சம் பறிமுதல்!

பறிமுதல்

சாத்தூர் அ.ம.மு.க தேர்தல் அலுவலகத்தில் இருந்து ரூ.43 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அமமுக

சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில், தி.மு.க வேட்பாளராக சீனிவாசன், அ.தி.மு.க வேட்பாளராக ராஜவர்மன், அ.ம.மு.க வேட்பாளராக சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிடுகின்றர். அ.ம.மு.க வேட்பாளரான சுப்பிரமணியத்தின் சொந்த ஊரான எதிர்கோட்டையில் உள்ள அவரது வீட்டின் அருகே அக்கட்சியின் தேர்தல் அலுவலகம் செயல்பட்டுவருகிறது.

மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு அ.ம.மு.க-வினர் பணம் விநியோகம் செய்வதாக பறக்கும்படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், எதிர்கோட்டையில் உள்ள அ.ம.மு.க தேர்தல் அலுவலகத்தில் பறக்கும்படையினர் இன்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, ரூ.43 லட்சம் இருந்தது தெரியவந்தது. எனவே, அந்தப் பணத்தை பறிமுதல்செய்த பறக்கும் படையினர், அதை ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மகாதேவன் (23) என்பவர் கைதுசெய்யப்பட்டார். மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.