நாமக்கல் தி.மு.க கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் சென்ற கார் விபத்து - மருத்துவமனையில் அனுமதி! | Namakkal dmk candidate car accident

வெளியிடப்பட்ட நேரம்: 08:32 (18/04/2019)

கடைசி தொடர்பு:08:32 (18/04/2019)

நாமக்கல் தி.மு.க கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் சென்ற கார் விபத்து - மருத்துவமனையில் அனுமதி!

நாமக்கல் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சின்ராஜ் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்

நாடாளுமன்றத் தேர்தலில், நாமக்கல் தொகுதியின் தி.மு.க கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சின்ராஜ்  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் மனைவி சாந்தி (50), மகள் சுஜிதா (24), பேத்தி இதழ்யா (4), பேரன் அஜய் (2) ஆகியோர் சேலம் சென்றுவிட்டு, நேற்று இரவு நாமக்கல் வந்துள்ளனர். நல்லிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென  சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

நாமக்கல்

இந்த விபத்தில் சின்ராஜ் மனைவி சாந்தி, மகள் சுஜிதா ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் வேட்பாளர் சின்ராஜ், அவரின் பேரன், பேத்தி ஆகியோருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. 

நாமக்கல்

நீங்க எப்படி பீல் பண்றீங்க