`எம்பாட்டுக்கு எதையாவது சொல்லமுடியாது, போங்கப்பா!'- கடிந்துகொண்ட துரைமுருகன் | I am not afraid of this sort of drama - DuraiMurugan Review

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (18/04/2019)

கடைசி தொடர்பு:11:40 (18/04/2019)

`எம்பாட்டுக்கு எதையாவது சொல்லமுடியாது, போங்கப்பா!'- கடிந்துகொண்ட துரைமுருகன்

``இந்த மாதிரி பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுபவன் நானில்லை. அ.தி.மு.க விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது’’ என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் விமர்சனம் செய்தார்.

தி.மு.க பொருளாளர் துரைமுருகன்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்துக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சுகுமாறன் தாக்கல் செய்த மனுக்கள் இன்று மாலை தள்ளுபடி செய்யப்பட்டன. இதுபற்றி காட்பாடியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``நாளைக்கு (இன்று) நான் ஓட்டுப்போட்ட பிறகு சென்னைக்குச் செல்கிறேன். கட்சித் தலைமையிடம் ஆலோசித்து முடிவெடுப்போம். எம்பாட்டுக்கு எதையாவது சொல்லமுடியாது, போங்கப்பா. இதையெல்லாம் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. 50 ஆண்டுகளாக அரசியலில் பல்வேறு சோதனைகளைப் பார்த்தவன். 100 ஆண்டுகள் கடந்த தி.மு.க-வில் பொருளாளர் பதவி வகிப்பவன். இயக்கத்தை நடத்துபவனில் ஒருவனாக இருப்பவன். இந்த மாதிரி பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுபவன் நானில்லை. ஜனாதிபதி கையெழுத்துப் போட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். அ.தி.மு.க, விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது’’ என்றார்.