`இன்னொரு சர்கார் படம் எடுத்தால்தான் சரி செய்வீங்களா?' - வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கடுப்பான ரமேஷ் கண்ணா! | actor ramesh khanna angry on election commission

வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:39 (19/04/2019)

`இன்னொரு சர்கார் படம் எடுத்தால்தான் சரி செய்வீங்களா?' - வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கடுப்பான ரமேஷ் கண்ணா!

நடிகர் ரமேஷ் கண்ணாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதால் அவர் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை.

ரமேஷ்

மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை தமிழகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 30 சதவிகிதம் வாக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளது. சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சில மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, நடிகர் ரமேஷ் கண்ணா இன்று தனது வாக்கைச் செலுத்துவதற்காக வாக்குச் சாவடி சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரது பெயர் இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். `ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் விளம்பரம் கொடுத்து வருகிறது. அதை ஏற்று வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் காலை 6 மணிக்கெல்லாம் வாக்குச் சாவடிக்கு வந்துவிட்டேன். நான்கைந்து தேர்தல்களாக இந்த வாக்குச் சாவடியில்தான் ஓட்டுப்போட்டு வருகிறேன். அதனால் சீக்கிரமே வந்து ஓட்டுப்போட்டு விடலாம் என்றால் என் பெயர் லிஸ்ட்டில் இல்லை எனக் கூறுகின்றனர். என்னுடைய அடையாள அட்டையைக் காண்பித்தும் பயனில்லை. 

ரமேஷ் கண்ணா

என் மனைவிக்கு இதே வாக்குச் சாவடியில்தான் ஓட்டு இருக்கிறது. ஆனால், எனக்கு இல்லை எனக் கூறிவிட்டார்கள். இது என்னுடைய தவறு கிடையாது. எனக்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது யார் பொறுப்பேற்பது. அரசாங்கம் இதற்கு பதில் சொல்ல வேண்டும். சர்கார் படம் வந்த பிறகுதான் `49 ஓ' படிவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது. இப்போது இதுபோன்ற பிரச்னைக்கும் ஒருபடம் எடுத்தால்தான் சரி செய்வீர்களா?" எனக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க