``வாழ்க்கைல முதல் முறை ஒட்டு போட்டது சந்தோஷமா இருக்கு!" - கோவை முதியவரின் நெகிழ்ச்சி | Coimbatore old man cast his vote for first time

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:40 (19/04/2019)

``வாழ்க்கைல முதல் முறை ஒட்டு போட்டது சந்தோஷமா இருக்கு!" - கோவை முதியவரின் நெகிழ்ச்சி

கோவையில், 50 வயது முதியவர் ஒருவர் முதல்முறையாக தனது வாக்கைப் பதிவுசெய்தார்.

கிருஷ்ணசாமி

கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கிவரும் 'ஈரநெஞ்சம்' முதியோர் காப்பகத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, 50 ஆண்டுகளில் முதல்முறையாகத் தனது வாக்கைப் பதிவுசெய்தார்.  இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைமையே வேறு. உறவுகள் யாரும் இல்லாத கிருஷ்ணசாமி, சாலையில் திரிந்துகொண்டிருந்தார். இதனிடையே, ஈரநெஞ்சம் காப்பகத்தின் மகேந்திரன், கிருஷ்ணசாமியைத் தங்களது காப்பகத்துக்கு அழைத்துவந்து மறுவாழ்வு அளித்தார். தற்போது அவர்,காப்பகத்தில் உள்ள மற்ற முதியோர்களுக்கு உதவி செய்துவருகிறார். 
இதுகுறித்து கிருஷ்ணசாமி கூறுகையில், "எனக்கு என்ன வயசுனு தெரியலை.  கல்யாணமும் ஆகலை. போட்டோகிராஃபரா இருந்தேன். அம்மா போன உடனே நான் எதையும் கண்டுக்கல. ரோட்ல சுத்திட்டு இருந்தேன். இப்போ, மகேந்திரன் மூலமா காப்பகத்துல எல்லாருக்கும் உதவி பண்ணிட்டு இருக்கேன்.  வாழ்க்கைல முதல் முறை ஓட்டு போட்டது, ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார்.