பிரஸ் மீட்டின்போது ஷூ வீச்சு! - காங்கிரஸை குற்றம் சாட்டும் பா.ஜ.க எம்.பி | Shoe attack on BJP MP GVL Narasimha Rao

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (18/04/2019)

கடைசி தொடர்பு:17:10 (18/04/2019)

பிரஸ் மீட்டின்போது ஷூ வீச்சு! - காங்கிரஸை குற்றம் சாட்டும் பா.ஜ.க எம்.பி

டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பா.ஜ.க எம்.பி நரசிம்ம ராவ் மீது ஷூ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்குதல்

பா.ஜ.க-வின் ராஜ்யசபா எம்.பி-யாக இருப்பவர், ஜி.வி.எல் நரசிம்ம ராவ். இவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். பா.ஜ.க-வின் தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்துவருகிறார். டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவருடன் பா.ஜ.க தலைவர் புபேந்திர யாதவ் உடன் இருந்தார். அப்போது பேசிய ராவ், காங்கிரஸை கடுமையாகச் சாடினார். `இந்துத்துவ செயற்பாட்டாளர்கள் மீது காங்கிரஸ் பொய் வழக்குகளைப் போடுகிறது'' என்று பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, பார்வையாளர்கள் பகுதியிலிருந்த அடையாளர் தெரியாத நபர் ஒருவர், நரசிம்ம ராவ் மீது ஷூவை வீசினார்.

தாக்கியவர்

இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. யார் அந்த நபர்... அவர் எதற்காக செருப்பை வீசினார்? எனப் பல்வேறு கேள்விகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. சம்பந்தப்பட்ட நபர், காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். தாக்குதலுக்குப்பின் பேசிய ராவ்,``இது, காங்கிரஸின் திட்டமிட்ட சதி. காங்கிரஸார்தான் இந்தத் தாக்குதலுக்குக் காரணம்'' என்று தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகிவருகிறது.