வாக்களிக்க வரிசையில் நின்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மரணம்! - கோவை சோகம் | Coimbatore: Retired official died while standing on queue in pooling station

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:35 (19/04/2019)

வாக்களிக்க வரிசையில் நின்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மரணம்! - கோவை சோகம்

கோவையில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மரணமடைந்தார்.

பாலகிருஷ்ணன்

கோவையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற 81 வயது முதியவர், தனது வாக்கை அளிப்பதற்காக காந்தி மாநகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்றிருந்தார். அப்போது, பாலகிருஷ்ணன் திடீரென்று சரிந்துவிழுந்து உயிரிழந்தார். உயிரிழந்த பாலகிருஷ்ணன், ஓர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. கோவை பகுதிக்கு முழுமைத் திட்டம் (master plan ) தயாரித்து, 1994-ம் ஆண்டு வழங்கியிருக்கிறார். குறிப்பாக, சுமார் 300 விரிவு அபிவிருத்தித் திட்டம் தயாரித்து வழங்கியவர். DTCP -ல் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வு பெற்றாலும், இன்றைய காலகட்டத்துக்கு தகுந்தது போல, முழுமைத் திட்டம் தயாரித்து வழங்கி உதவியவர் . பழகுவதற்கு மிகவும் எளிமையானவர், இனிமையானவர். நேர்மையான அரசு அதிகாரியாக இருந்தவர். முக்கியமாக, கட்டட விதிகள்குறித்து முதல் முதலாக புத்தகங்கள் தயாரித்து வழங்கியவரும் இந்த பாலகிருஷ்ணன்தான். அவரது மறைவு, ஈடுசெய்த முடியாத இழப்பு என்று கோவை மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.