எழுந்து நடக்க முடியாத நிலையிலும் ஓட்டுப்போட வந்த அரசு பேருந்து நடத்துநர்! − தேனியில் நெகிழ்ச்சி சம்பவம் | government bus driver caste his vote, from hospital

வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:37 (19/04/2019)

எழுந்து நடக்க முடியாத நிலையிலும் ஓட்டுப்போட வந்த அரசு பேருந்து நடத்துநர்! − தேனியில் நெகிழ்ச்சி சம்பவம்

விபத்தில் சிக்கி எழுந்து நடக்க முடியாத நிலையிலும் ஆப்புலன்ஸில் வந்து தனது வாக்கை பதிவு செய்த அரசு போக்குவரத்து கழக நடத்துனருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

முபாரக் அலி

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக நடத்துனர் முபாரக் அலி.  கடந்த 16 ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் முபாரக் அலியின் கால் முறிந்தது. இதனையடுத்து தேனி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

முபாரக் அலி

இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு பதிவில் தனது ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என முடிவு செய்த முபாரக் அலி, தேனி தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக பெரியகுளத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவை செய்தார். வாக்குச்சாவடி அதிகாரிகள் அவருக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுத்தனர். இந்நிகழ்வு தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார் முபாரக் அலி. இச்சம்பவம் தேனி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.