பானை சின்னத்தை உடைத்தவர்கள்மீது தாக்குதல்! - பதிலுக்கு வீட்டை நொறுக்கிய கும்பல் | Clash between two groups in Ariyalur

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:54 (19/04/2019)

பானை சின்னத்தை உடைத்தவர்கள்மீது தாக்குதல்! - பதிலுக்கு வீட்டை நொறுக்கிய கும்பல்

அரியலூரில், வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட தகராறில், 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. தாக்குதலில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                              

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுவந்தது. அப்போது, வாக்குப்பதிவு மையத்தின் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சின்னமான பானையை ஒரு பிரிவினர் உடைத்துள்ளனர். இதையடுத்து, இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது.

                                               

அப்போது, மற்றொரு பிரிவினர் தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினர் வசித்துவந்த தெருவில் புகுந்து 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை அடித்துச் சேதப்படுத்தினர். இதில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 3 பேரை அடித்து மண்டையை உடைத்துள்ளனர். அவர்கள் 3 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்தில் இளைஞர்கள் யாரும் கூடக் கூடாது என்று காவல் துறையின் கறார் உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதோடு, அப்பகுதியில் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் போலீஸார் மற்றும் ரிசர்வ் படை போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

                                            
இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல், அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 


அதிகம் படித்தவை