மை வைக்கும் நேரத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு! - புதுக்கோட்டை சோகம் | 60 year old woman died in Pudukottai polling booth

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:55 (19/04/2019)

மை வைக்கும் நேரத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு! - புதுக்கோட்டை சோகம்

அறந்தாங்கி அருகே வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த மூதாட்டி, மை வைக்கும் நேரத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மல்லிகா

தமிழகத்தில் காலை 7 முதல் மாலை 6 மணி வரை மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடந்துமுடிந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குருங்களூரைச் சேர்ந்தவர் மல்லிகா(60). இவர் குருங்களூரில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்களிக்க, வீட்டில் இருந்தே   நீண்ட தூரம் கடும் வெயிலில் நடந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சோர்வடைந்த நிலையில் நீண்ட வரிசையில் நின்ற மல்லிகா, வாக்குப்பதிவு அலுவலர்களிடம் ஆவணங்களைக் காண்பித்திருக்கிறார். பின்னர், மை வைக்கும் நேரத்தில், திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்த முகவர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். ஆர்வமுடன் வாக்களிக்க வந்த மூதாட்டி மை வைத்து வாக்களிப்பதற்கு முன்னாள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.