`குற்ற உணர்வை ஏற்படுத்திவிடும்!' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி வந்த பெண்கள் | women travels 2,800 km from punjab to ooty to caste their vote

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (19/04/2019)

கடைசி தொடர்பு:07:56 (19/04/2019)

`குற்ற உணர்வை ஏற்படுத்திவிடும்!' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி வந்த பெண்கள்

பஞ்சாப் மாநிலத்திலிருந்து 2,800 கி.மீ பயணித்து சொந்த ஊரான ஊட்டிக்கு வந்து பெண்கள், தங்கள் வாக்குகளை செலுத்தியிருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது.

2800 பயணித்து ஊட்டி வந்த பெண்கள்

 நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஏக்குணி கிராமத்தைச் சேர்ந்த அஞ்சனா குடும்பத்தினர்  பஞ்சாபில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், தேர்தலில் தங்கள் வாக்கைப் பதிவு செய்வதற்காக 2,800 கி.மீ பயணித்து சொந்த ஊரான ஏக்குணி கிராமத்துக்கு அவர்கள் வந்தனர். ஏக்குணியில் உள்ள வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து  தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து பேசிய அஞ்சனா மற்றும் அம்ரிதா ஆகிய இருவரும், ``வாக்களிக்காமல் வெளியூரில் இருப்பது குற்றஉணர்வை ஏற்படுத்துகிறது. எனவே, எங்ளுக்கான உரிமையைப் பெற ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. வாக்களிப்பது நமது அடிப்படை உரிமை. ஏக்குணி கிராமத்தைச் சேர்ந்த நாங்கள் குடும்பத்துடன் தொழில் காரணமாக பஞ்சாபில் குடியேறினோம். ஒவ்வொரு தேர்தலுக்கும் கட்டாயமாக சொந்த ஊருக்கு வந்து எங்கள் வாக்கைப் பதிவு செய்வோம். இந்தத் தேர்தலிலும் வாக்களிக்க கடந்த இரு நாள்களுக்கு முன்பு பஞ்சாபில் இருந்து சொந்த ஊரான ஏக்குணிக்கு வந்தோம். தேர்தலில் வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றனர்.