``உங்களுக்காக இந்த உலகம் காத்துக்கிட்டு இருக்கு!" -ப்ளஸ் டூ மாணவர்களுக்கு அமீர் தரும் நம்பிக்கை | director actor amrr's moticvational video for +2 students on their exam results

வெளியிடப்பட்ட நேரம்: 07:36 (19/04/2019)

கடைசி தொடர்பு:07:36 (19/04/2019)

``உங்களுக்காக இந்த உலகம் காத்துக்கிட்டு இருக்கு!" -ப்ளஸ் டூ மாணவர்களுக்கு அமீர் தரும் நம்பிக்கை

+2

தமிழகத்தில் தேர்தல், தேர்வுகள் முடிந்த நிலையில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளையொட்டி எதிர்பார்த்த மார்க் கிடைக்காததாலும் தோல்வியுற்றதாலும் மாணவர்கள் சிலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் மிகத் தவறான வேலையைச் செய்து வருகின்றனர். அதைத் தடுக்கும் நோக்கத்தில் இயக்குநரும்,  நடிகருமான அமீர் இன்று தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொலியில், ``கல்வி எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு விஷயம்தான். ஆனால், அதுமட்டும் வாழ்க்கை கிடையாது. இன்று சமுதாயத்தில் வெற்றியடைந்தவர்களில் கல்வியால் மட்டும் உயர்ந்தவர்கள் இல்லை. வேறேதோ திறமையாலும் உயர்ந்தவர்கள் உள்ளார்கள். இந்தத் தேர்வில் பின்னடைவோ, தோல்வியோ ஏற்பட்டால் மாணவர்கள் தவறான முடிவு எதையும் கையில் எடுக்கக்கூடாது. நமது திறமை எதில் உள்ளது என்று பார்க்க வேண்டும்.

அமீர்

`` உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள உயிர் ரொம்ப விலை மதிக்க முடியாதது. ரோட்ல போகும்போது அடிப்படுது கிழ விழுறோம் ஆனா அங்கேயே படத்துக் கிடக்குறோமா? அதிலிருந்து மீண்டு வந்து அடுத்த வேலைகளுக்கு நகருகிறோம். அந்தமாதிரி இந்த தேர்வு வாழ்க்கை ஓட்டத்தில அடுத்த படிதான். இதுவே முடிவு கிடையாது. இந்தத் தோல்வியோ பின்னடைவோ உங்களை ஏதும் செய்யாது. இன்னொரு தேர்வு எழுதிக்கலாம். உங்களுக்காக இந்த உலகம் காத்துக்கிட்டு இருக்கு. ஒவ்வொரு வருஷமும் இந்தநாள் வரும்போது மாணவர்கள் எடுக்குற தவறான முடிவுகள் வேதனையா இருக்கு. 

இந்தத் தேர்வு என்பது ஒரு சின்னக் கட்டம்தான். இதில் மீண்டும் தேர்வு எழுதலாம் அல்லது வேறொரு திறமையை நோக்கி உங்களை நகர்த்தலாம். உங்கள் உயிர் விலை மதிக்கமுடியாதது. தன்னம்பிக்கையோடு இருங்க. இந்த உலகம் உங்களுக்கானது. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அன்பா இருங்க” என்று கூறியுள்ளார்.

 

 


அதிகம் படித்தவை