12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு - முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம்! | Tamil Nadu Board HSC Exam results released

வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (19/04/2019)

கடைசி தொடர்பு:11:01 (19/04/2019)

12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு - முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம்!

2018 -19-ம் ஆண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்ககம். பொதுவாக மே மாதம் வெளியாகும் இந்தத் தேர்வு முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலினால் இந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதிலும் சுமார் 8,42,512 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் மாணவிகள் 4,53,262 பேர், மாணவர்கள்  3,89,250 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மொத்தமாக உள்ள 7,083 மேல்நிலைப் பள்ளிகளில் 1,281 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களிலும் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இதைத் தவிர தமிழகம் முழுவதும் மொத்தமாக 2,697 மாற்றுத் திறனாளிகள் பொதுத் தேர்வு எழுதி அதில் 2,404 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் இந்த வருடம் 45 சிறைவாசிகள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர் அவர்களில் 34 பேர் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். 

மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம் : 

 


அதிகம் படித்தவை