தமிழக மக்கள் தொகை எவ்வளவு?: கணக்கெடுப்பு வெளீயீடு | TN population senses relased

வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (31/05/2013)

கடைசி தொடர்பு:15:53 (31/05/2013)

தமிழக மக்கள் தொகை எவ்வளவு?: கணக்கெடுப்பு வெளீயீடு

சென்னை: தமிழக மக்கள் தொகை எவ்வளவு என்பது குறித்த கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று இது தொடர்பான அறிக்கையை பத்திரிகையாளர்களிடம் வெளியிட்ட தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் எம்.ஆர். வி.கிருஷ்ண ராவ், "2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7,21,47,030. இதில் ஆண்கள் 3,61,37,975 பெண்கள் 3,60,09,055. நகர் பகுதி மக்கள் தொகை 3,49,17,440. கிராமப்புற மக்கள் தொகை 3,72,29,590. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்கள் தொகை 97 லட்சம் அதிகரித்துள்ளது. கிராமப்புறத்தில் 23 லட்சமும் நகர்புறத்தில் 74 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை எண்ணிக்கையில் சென்னை 46,46,732 முதல் இடத்திலும் பெரம்பலூர் 5,65,223 கடைசி இடத்திலும் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியில் காஞ்சிபுரம் முதல் இடத்திலும் நீலகிரி கடைசி இடத்திலும் இருக்கிறது. மக்கள் தொகை அடர்த்தியில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26,553 என்று சென்னை முதல் இடத்திலும் 287 பேருடன் நீலகிரி கடைசி இடத்திலும் உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 1,042 பெண்கள் என்று நீலகிரி முதல் இடத்திலும் 946 பெண்கள் என்று தர்மபுரி கடைசி இடத்திலும் இருக்கிறது.

எஸ்.சி. மக்கள் தொகையில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களிலும் கன்னியாகுமரி மாவட்டம் கடைசி இடத்திலும் இருக்கிறது. பழங்குடியினர் மக்கள் தொகையில் சேலம் முதல் இடத்திலும் கரூர் கடைசி இடத்திலும் உள்ளது. எழுத்தறிவு விகிதத்தில் 91.7 சதவீதத்துடன் கன்னியாகுமரி முதல் இடத்திலும் சென்னை 90.02 சதவீதத்துடன் இரண்டாது இடத்திலும் தர்மபுரி 68.5 சதவீதத்துடன் கடைசி இடத்தில் இருக்கிறது" என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்