ஓட்டு போட்டு வெளியே வந்த மூதாட்டி மாரடைப்பால் மரணம் - உசிலம்பட்டி சோகம்! | Madurai old lady dies after putting vote

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (19/04/2019)

கடைசி தொடர்பு:11:25 (19/04/2019)

ஓட்டு போட்டு வெளியே வந்த மூதாட்டி மாரடைப்பால் மரணம் - உசிலம்பட்டி சோகம்!

ஓட்டு போட்டுவிட்டு வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வந்த மூதாட்டி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டி

மதுரையில் சித்திரை திருவிழா ஒரு பக்கம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. தேர்தல் அன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.  மதுரை உசிலம்பட்டி பகுதி தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டுவருவதால் அப்பகுதி வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களித்தனர்.

இந்நிலையில் உசிலம்பட்டி அடுத்த  துரைச்சாமிபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்த வாக்காளர் முத்துப்பிள்ளை என்ற மூதாட்டி, மாலை அதே பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்றுள்ளார். தனது ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு வெளியே வரும்போது மிகுந்த பதற்றம் அடைந்து அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது. அப்போது அங்கிருந்த நபர்கள் மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்து தூக்கிப் பார்த்துள்ளனர். ஆனால், அவர் அப்போதே இறந்துவிட்டதாகக் கூறுப்படுகிறது. வாக்களித்து தனது கடமையை நிறைவேற்ற வந்த மூதாட்டி மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.