`அதே மக்கள்; அதே பக்தி' - தேர்தலால் கண்ணகி திருவிழாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை! | loksabha election didn't impact on Kannaki festival

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (19/04/2019)

கடைசி தொடர்பு:19:30 (19/04/2019)

`அதே மக்கள்; அதே பக்தி' - தேர்தலால் கண்ணகி திருவிழாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது, மங்கலதேவி கண்ணகி கோயில். சித்திரை முழு நிலவு நாளான இன்று நடைபெற்ற திருவிழாவில், உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் கண்ணகியை வழிபட்டுச் சென்றனர்.

கோயில்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள், கண்ணகி திருவிழா வர இருக்கிறது எனவும், இதனால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய, கண்ணகி திருவிழாவில் கலந்துகொண்ட பழனி, "வருடா வருடம் கண்ணகி திருவிழாவில் கலந்துகொள்ள இந்த மலைமீது இருக்கும் கோவிலுக்கு வந்துவிடுவேன். இந்த முறை குடும்பத்தோடு வந்திருக்கிறேன். சிறப்பான ஏற்பாடுகளை இரு மாநில அதிகாரிகளும் செய்திருக்கிறார்கள்.

மலைப்பாதைகள் ஆங்காங்கு சீர் செய்யப்பட்டிருக்கின்றன. கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, மருத்துவ வசதி என அனைத்தும் மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்தன. வழக்கம்போல கேரள அதிகாரிகளின் சோதனைகள் கடுமையாக இருந்தன.  நேற்றைய தினம் தேர்தல் என்பதால், கண்ணகி கோயில் திருவிழாவிற்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள் என்றும், குறைவான மக்களே வருவார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த வருடம் வந்த 'அதே மக்கள்... அதே பக்தி...' இதில் எந்தக் குறையும் இல்லை. திருவிழா சிறப்பாக நடந்துமுடிந்தது. அனைவருக்கும் ரொம்ப மகிழ்ச்சி" என்றார்.


அதிகம் படித்தவை