`நான்கு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துக!' - திருமாவளவன் கோரிக்கை! | Thirumavalavan file a petition to conduct a re-election in Kannambadi village

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (20/04/2019)

கடைசி தொடர்பு:07:30 (20/04/2019)

`நான்கு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துக!' - திருமாவளவன் கோரிக்கை!

பொன் பரப்பி கிராமத்தில் 4 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தொல்.திருமாவளவன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு கொடுக்க இருக்கிறார்.

                                              பொன்பரப்பி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் ஒருபிரிவினர், மற்றொரு பிரிவினர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இதில் பாதிப்படைந்தவர்கள், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் நேரில்  சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்தார்.

                                              

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``பாட்டாளி மக்கள் கட்சி தவறான அணுகுமுறையைக் கையாளுவதால் அந்த சமூகத்தையே அதன் தலைவர் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார். இதனால் அந்த இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகிக்கொண்டிருக்கிறது. பொன்பரப்பி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டும், அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். அதேபோல் பொன் பரப்பி கிராமத்தில் 4 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான விஜயலெட்சுமியிடம்  மனு அளித்தேன்.

                                        மோதல் 

அவ்வாறு நடத்துவதற்கான சூழல் இல்லை என மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி கூறினார். இதுகுறித்து சட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்முறை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்'' என திருமாவளவன் வலியுறுத்தினார்.


அதிகம் படித்தவை