நீலகிரி அருகே மின்னல் தாக்கியதில் 8 பேர் காயம் - மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல 17 மணி நேர போராட்டம்! | 8 persons affected by thunderstorms nilgiri coonoor

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (20/04/2019)

கடைசி தொடர்பு:15:20 (20/04/2019)

நீலகிரி அருகே மின்னல் தாக்கியதில் 8 பேர் காயம் - மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல 17 மணி நேர போராட்டம்!

நீலகிரி மாவட்டம் அருகே மின்னல் தாக்கியதில் கர்ப்பிணி உட்பட 8 பழங்குடிகள் காயமடைந்தனர்.17 மணி நேர போராட்டத்துக்குப் பின்னரே ஆம்புலன்ஸில் ஏற்றினர்.

ஆம்புலன்ஸ்

நீலகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குன்னூரை அடுத்துள்ள சின்னாளக்கோம்பைப் பகுதியில் நேற்று இரவு மின்னல் இடியுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் சின்னாளக்கோம்பையைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு 8 மணிக்கு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை, இரவு நேரம் என்பதால் யானை, கரடி நடமாட்டம் அதிகம் இருந்ததால் மின்னல் தாக்கி காயமடைந்தவர்களை தொட்டில் கட்டி தூக்கிக் கூட வரமுடியவில்லை, இன்று காலை வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டனர்.

நீலகிரி

அவர்களின் குடியிருப்புப் பகுதிக்கு வாகனங்கள் செல்லமுடியவில்லை. பின்னர் ஊர் மக்கள் உதவியுடன் பல போராட்டங்களுக்குப் பின் ஊர் மக்கள் உதவியுடன் மின்னல்தாக்கி காயமடைந்த 6 பெண்கள் உட்பட 8 பேரை இன்று பகல் 12 மணிக்கு ஆம்புலன்ஸில் ஏற்றினர். நேற்று இரவு 8 மணிக்கு மின்னல் தாக்கி காயமடைந்தவர்களை 17 மணி நேரம் போராடி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர்

.

பின்னர் ஒரே ஆம்புலன்ஸில் 8 பேரையும் ஏற்றி குன்னூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.