தமிழகத்தில் தேர்தல் ஓவர் - கேரளா சென்ற பி.ஜே.பி வேட்பாளர்கள்! | TN BJP candidates off to kerala for campaign

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (20/04/2019)

கடைசி தொடர்பு:21:40 (20/04/2019)

தமிழகத்தில் தேர்தல் ஓவர் - கேரளா சென்ற பி.ஜே.பி வேட்பாளர்கள்!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், பி.ஜே.பி வேட்பாளர்கள் ஹெச்.ராஜா மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரசாரத்துக்காக கேரளா சென்றுள்ளனர்.

பி.ஜே.பி வேட்பாளர்கள்

தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு, கடந்த 18-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பி.ஜே.பி கோவை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டனர். சிவகங்கையில் ஹெச்.ராஜாவும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும் களம் கண்டுள்ளனர். தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இவர்கள் இருவரும் பிரசாரத்துக்காக கேரளா சென்றுள்ளனர்.

கேரளாவில் 23-ம் தேதி நாடாளுன்றத் தேர்தல் நடக்க உள்ளது. 21-ம் தேதி பிரசாரம் முடிவடைகிறது. இந்நிலையில், ஹெச்.ராஜா இன்று (சனிக்கிழமை) காலை கோவை வந்தார். சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை பி.ஜே.பி நிர்வாகிகளுடன் தேர்தல்குறித்து ஹெச்.ராஜா உரையாடினர். பி.ஜே.பி தலைவர் அமித்ஷா இன்று கேரளா வந்திருந்தார். பத்தினம்திட்டா பகுதியில் அவர் கலந்துகொண்ட பேரணி மற்றும் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக ஹெச்.ராஜாவும், சி.பி.ராதாகிருஷ்ணனும் கேரளா சென்றுள்ளனர்.