மதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்! | man dead near madurai

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (21/04/2019)

கடைசி தொடர்பு:09:20 (21/04/2019)

மதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்!

இரவில் தனது தோட்டத்திற்குத் தூங்க சென்ற விவசாயியை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை உசிலம்பட்டி அடுத்த எழுமலை பகுதியை  சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. விவசாயியான இவர் மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்துவருகிறார். விவசாயி வெள்ளைச்சாமி தோட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் கட்டுமான பொருட்களை பாதுகாக்க வேண்டும் என நேற்று இரவு சாப்பிட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். காலை

யில் வெள்ளைச்சாமியின் மகன்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது வெள்ளைச்சாமி கடுமையாக வெட்டப்பட்டு கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இரவில் தோட்டத்திற்கு தூங்க சென்ற விவசாயிக்கு நடத்த கொலை சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியை வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள் யார் என்பதை காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்துவருகின்றனர். மேலும் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கொலையாளிகளை விரைவாக கண்டறியவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளனர்.