மதுரையில் கோஷ்டி பூசல்! - வேட்பாளர் அறிவிப்பதில் தாமதிக்கும் அ.தி.மு.க | thirupparankundram byelection admk candidate announcement delayed for admk members fight

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (22/04/2019)

கடைசி தொடர்பு:15:45 (22/04/2019)

மதுரையில் கோஷ்டி பூசல்! - வேட்பாளர் அறிவிப்பதில் தாமதிக்கும் அ.தி.மு.க

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளரை தி.மு.க.வைத் தொடர்ந்து அ.ம.மு.க-வும் அறிவித்து தேர்தல் வேலையை ஆரம்பித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க-வில் வேட்பாளர் அறிவிக்க தாமதம் ஏற்பட்டு வருகிறது.

அதிமுக செல்லூர் ராஜு

திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவைத் தொடர்ந்து நீண்டகாலமாக அறிவிக்கப்படாமல் இருந்த தேர்தல் தேதி, போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்பு, தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் எந்தக் குழப்பமும் இல்லாமல் ஏற்கெனவே போட்டியிட்ட டாக்டர் சரவணனை தி.மு.க. தலைமை வேட்பாளராக அறிவித்தது. அதுபோல் மற்ற மூன்று தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், அ.தி.மு.கவோ  நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்புதான் விருப்ப மனு விநியோகம் செய்தது. இத்தொகுதி இடம்பெற்றுள்ள புறநகர் மாவட்டச் செயலாளரான ராஜன் செல்லப்பா தன்னுடைய ஆதரவாளர் ரமேசுக்கும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழரசன், வெற்றிவேல், ஏ.கே.போஸின் குடும்பத்தினருக்கும், அமைச்சர் செல்லூர்ராஜு, கிரம்மர்சுரேஷ் மற்றும் சோலைராஜாவுக்கும் சிபாரிசு செய்கிறார்கள்.

ஓ.பி.எஸ்ஸை நம்பி மாஜி எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் சீட் எதிர்பார்க்கிறார். இந்த நிலையில் கடுமையான கோஷ்டிப்பூசல் நிலவும் மதுரை மாவட்ட அ.தி.மு.க-வில் இன்னொரு குரூப் உள்ளடி வேலை செய்யும் என்பதால் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனை வேட்பாளராக்கலாமா என்று அ.தி.மு.க தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க