`அதிகாரிகளை நம்பினால் வேலைக்காகாது!’ - குளங்களைத் தூர்வாரிய இளைஞர்கள் | Young people who are draining the ponds

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (22/04/2019)

கடைசி தொடர்பு:17:30 (22/04/2019)

`அதிகாரிகளை நம்பினால் வேலைக்காகாது!’ - குளங்களைத் தூர்வாரிய இளைஞர்கள்

அரக்கோணத்தில் அதிகாரிகளை நம்பி பிரயோஜனம் இல்லாததால், இளைஞர்களே களத்தில் இறங்கி குளங்களை தூர்வாரி வருகின்றனர்.

குளத்தை தூர்வாரும் இளைஞர்கள்

வேலூர் மாவட்டம், அரக்கோணம் குருவராஜப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள வளையல்காரக் குளம் 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூர்வாரப்படவில்லை. குப்பைகள் தேக்கத்தால் தூர்ந்துகிடந்தது. இரவு நேரங்களில் குடிமகன்கள் குடித்துவிட்டு மது பாட்டில்களை வீசிவிட்டுச் செல்கிறார்கள். இந்த நிலையில், அந்தக் குளத்தை தூர்வாரிச் சீரமைப்பதற்காக குருவராஜப்பேட்டையைச் சேர்ந்த கிராம மக்கள் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளிடம் நடையாய் நடந்து மனு கொடுத்தும் பிரயோஜனம் இல்லை. அதிகாரிகளின் அலட்சியமான பேச்சுகளால் மனம் மட்டுமே புண்பட்டது.

கால்வாய் சீரமைத்த பள்ளி மாணவர்கள்.

இதையடுத்து, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் குளத்தைச் சீரமைக்க இளைஞர்கள் முன்வர வேண்டுமென்று குருவராஜப்பேட்டையைச் சேர்ந்த சிலர் தகவலை வைரலாக்கினர். இதைப் பார்த்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் நேற்று திரண்டுவந்தனர். அவர்கள் 4 குழுக்களாகப் பிரிந்து வளையல்காரக் குளத்தில் குப்பைகளை அகற்றித் தூர்வாரினர். குடிநீர்ப் பிரச்னை அதிகம் நிலவிவருவதால் அரக்கோணத்தில் உள்ள முக்கியமான குளங்களைத் தூர்வாரி, அதற்கான கால்வாய்களில் பராமரிப்புப் பணிகளை செய்யவும் இளைஞர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர்.