உணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர்! - கொலையாளியைத் தேடும் காவல்துறை | A hotel supplier man murdered near tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (22/04/2019)

கடைசி தொடர்பு:22:30 (22/04/2019)

உணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர்! - கொலையாளியைத் தேடும் காவல்துறை

திருப்பூரில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்த சப்ளையர் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட செரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். பெயின்டராகப் பணியாற்றி வந்த இவர், பகுதி நேரமாக செட்டிப்பாளையம் என்ற பகுதியில் உள்ள சரவணகுமார் என்பவருக்குச் சொந்தமான தனியார் உணவகத்தில் சப்ளையராகவும் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அந்த உணவக ஊழியர்கள், சொந்த ஊர்களுக்குச் சென்றதால் கடந்த 4 நாள்களாக சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இதையடுத்து பூட்டிய உணவகத்துக்குள் அமர்ந்து நேற்றைய தினம் சப்ளையர் நாகராஜ் மது அருந்தியதாகத் தெரிகிறது. இந்தநிலையில் இன்றைய தினம் உணவகம் திறந்து கிடந்திருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் உணவகத்துக்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சப்ளையர் நாகராஜ் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பிறகு, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், சப்ளையர் நாகராஜனின் உடலைக் கைப்பற்றித் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


அதிகம் படித்தவை