மியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம்! - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு | mutual fund awareness class!

வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (23/04/2019)

கடைசி தொடர்பு:18:42 (23/04/2019)

மியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம்! - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு

மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நாணயம் விகடன் இதழ் மற்றும் ஆதித்யா பிர்லா கேப்பிடல் நிறுவனங்கள் இணைந்து, 'மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' என்ற முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, வரும் 27.4.2019, சனிக்கிழமை, மாலை 5.30 முதல் 8.30 மணி வரை, திருவண்ணாமலையில், ஹோட்டல் ராமகிருஷ்ணாவில் நடத்துகின்றன. 

என்னிடம் சேமிப்பு இருக்கிறது! எனக்கு போனஸ் கிடைத்திருக்கிறது! எனது சம்பளத்தில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை மிஞ்சுகிறது! ஆனால், இந்தப் பணத்தை என்ன செய்வதெனத் தெரியவில்லை! இதற்கு மேல் எப்படி வருமானத்தைப் பெருக்குவது எனத் தெரியவில்லையென்று குழப்பமாக உள்ளதா? என்னால் நேரடியாகத் தொழிலில் இறங்க ஆர்வமிருந்தாலும் அதற்கான வாய்ப்போ, தைரியமோ, நுட்பமோ கிடையாது. இன்னொருவரின் தொழிலில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தில் பங்குபோட விருப்பமாக இருக்கிறது. அதற்கான வாய்ப்பு உள்ளதா? எனக்கு பங்குச்சந்தை முதலீட்டுக்கான அனுபவம் கிடையாது, சூட்சுமமும் தெரியாது. ஆனால் பங்குச்சந்தையில் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புகிறேன். அதற்கு வழியுண்டா?

மியூச்சுவல் ஃபண்ட்

ஒவ்வொருவரின் மனதிலும் இப்படி எக்கச்சக்கமான கேள்விகள் குவிந்திருக்கின்றன. அனைவருக்கும் பொதுவான தேவை, பாதுகாப்பான, முறைப்படுத்தப்பட்ட முதலீடும், அந்த முதலீட்டுக்கு கணிசமான வருமானமும். அதற்கான சிறப்பான முதலீட்டு முறையே மியூச்சுவல் ஃபண்ட். இந்த முதலீட்டில் கவனிக்கவேண்டியவை எவை, எத்தனை வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கான காலத்தை எப்படித் தீர்மானிப்பது, எந்தெந்த தேவைக்குரியவர்களுக்கு, வயதுக்குரியவர்களுக்கு எந்தத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்கும் என்பனவற்றைத் தெரிந்துகொள்வது அவசியம். 

எனவே, மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நாணயம் விகடன் இதழ் மற்றும் ஆதித்யா பிர்லா கேப்பிடல் நிறுவனங்கள் இணைந்து, `மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' என்ற முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, வரும் 27.4.2019, சனிக்கிழமை, மாலை 5.30 முதல் 8.30 மணி வரை, திருவண்ணாமலையில், ஹோட்டல் ராமகிருஷ்ணாவில் நடத்துகின்றன. 

இந்நிகழ்ச்சியில், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இன்வெஸ்டர் எஜுகேஷன் தலைவர் கே.எஸ்.ராவ், ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இன்வெஸ்டர் எஜுகேஷன் & டிஸ்ட்ரிபியூட்டர் டெவலப்மென்ட் ஏவிபி எஸ்.குருராஜ்  மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள். அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள், 97909 90404 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகப் பதிவு செய்யலாம்.