`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்!' - ஆண்ட்ரியா | Actress andriea attends eye hospital inauguration at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (23/04/2019)

கடைசி தொடர்பு:08:24 (24/04/2019)

`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்!' - ஆண்ட்ரியா

'பாலிவுட் நடிகை ஐஷ்வர்யா ராயைப் பார்த்துதான் நானும் கண்தானம் செய்தேன்' என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்திருக்கிறார்.

ஆண்ட்ரியா

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட ராயப்பண்டாரம் வீதியில் இன்று, தனியார் கண் மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்த் திரைப்பட நடிகை ஆண்ட்ரியா கலந்துகொண்டு, கண் மருத்துவமனையைத் திறந்துவைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆண்ட்ரியா, ``இந்த மருத்துவமனை தமிழகம் முழுவதும் தன் கிளைகளைப் பரப்பியதற்கு வாழ்த்துகள். கண் மருத்துவம் தொடர்பான சேவைகள் நாட்டின் அனைத்துக் கிராமப்புறங்களுக்கும் சென்றடைய வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்யவேண்டியது அவசியம். அதன்மூலம் கண்பார்வை அற்றவர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உண்டாகும். அதுவே நாம் செய்யும் சிறந்த செயலும்கூட. கண்தானம்குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். நானும் எனது கண்களைத் தானம்செய்துள்ளேன். பாலிவுட் நடிகை ஐஷ்வர்யா ராய், தன்னுடைய கண்களைத் தானம்செய்துள்ளார். அவரைப் பார்த்துதான் நானும் கண்தானம் செய்திருக்கிறேன்'' என்றார்.