``பி.எஸ்.என்.எல் 4ஜி சாத்தியமா?” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம் | BSNL 4G - high court notice to central government

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (24/04/2019)

கடைசி தொடர்பு:07:40 (24/04/2019)

``பி.எஸ்.என்.எல் 4ஜி சாத்தியமா?” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்

பி.எஸ்.என்.எல் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு 4ஜி இணைப்பு வசதி செய்துதருவதுகுறித்து மத்திய அரசு  உரிய விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. .

உயர்நீதிமன்றம்

இராஜபாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த மனுவில்," 4ஜி என்று சொல்லக்கூடிய அதிவேக இணைய சேவையை  பல்வேறு தனியார் நிறுவங்கள் வழங்கிவருகின்றன. ஆனால், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல், இன்னும் இந்த சேவையை வழங்க முன்வரவில்லை. இதனால் பல கோடி இழப்பு ஏற்படுகிறது. இது, தனியார் நிறுவனங்களுக்கு லாபமாகச் சேர்கிறது. இதனை அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, அரசு லாபத்தை ஈட்டவும் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவும் பி.எஸ்.என்.எல்- க்கு 4ஜி சேவையைத்  தொடங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனத் தனது மனுவில் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த மனு நேற்று நீதிபதிகள் என் .கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் உரிய பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.


அதிகம் படித்தவை