தார்பாயைக் கிழித்து தலையை வெளியே நீட்டிய ஜெர்சி பசுக்கள்!- சிசிடிவியில் சிக்கிய கடத்தல் கும்பல் | cow saved with the help of cctv cam

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (24/04/2019)

கடைசி தொடர்பு:11:15 (24/04/2019)

தார்பாயைக் கிழித்து தலையை வெளியே நீட்டிய ஜெர்சி பசுக்கள்!- சிசிடிவியில் சிக்கிய கடத்தல் கும்பல்

நீலகிரி மாவட்டம் கேத்தி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற இரண்டு பசு மாட்டை திருடியவர்களை சி.சி.டிவி உதவியுடன் போலீஸார் கைது செய்தனர்.

வாகனத்தில் கடத்திக் கொண்டு செல்லப்படும் பசு

நீலகிரி மாவட்டம், எல்லநள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி புட்ராஜ் மேய்ச்சலுக்குச் சென்ற தனது இரண்டு உயர் ரக ஜெர்சி பசுமாடுகளை காணவில்லை எனக் கடந்த 17-ம் தேதி கேத்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து இரண்டு பசுமாடுகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் கேத்தி போலீஸார் ஈடுபட்டனர்.  நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள பர்லியார் சோதனைச் சாவடியில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் தார்பாய் மூடிய ஒரு சரக்கு வாகனம் செல்வதும், அந்த வாகனத்திலிருந்து ஒருவர் காவல்துறை சோதனை சாவடிக்குச் சென்ற காட்சியும் அப்போது ஒரு மாடு மூடபட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாயை தலையால் விலக்கி தலையை வெளியில் காட்டி மாடு எட்டிப் பார்க்கும் காட்சியும் பதிவாகியிருந்தது.

கடத்தப்பட்ட பசுக்கள்

சி.சி.டிவி காட்சிகளை கொண்டு சரக்கு வாகனத்தின் பதிவு எண் மூலம் தகவல்களைச் சேகரித்த போலீஸார் காணாமல் பேன இரண்டு பசு மாடுகளையும் பொள்ளாச்சி பகுதியில் மீட்டனர். மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த இரண்டு உயர் ரக பசுமாடுகளை திருடியது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் சிவா ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பசுக்களை கடத்திய கும்பல்

தலைமறைவான ஒருவனைத் தேடி வருகின்றனர். திருடிய பசுமாடுகள் வெளியில் தெரியாமல் இருக்க பிளாஸ்டி தார்பாய் மூடிச் சென்றும் சோதனைச் சாவடியில் வாகனம் நிறுத்தியபோது பசுமாடு தக்க சமயத்தில் தலையை வெளியில் தூக்கிக் காண்பித்த காட்சியும் பார்ப்போரை வியப்படையச் செய்துள்ளது.