`அந்தப்பக்கம் தள்ளி நில்லுங்கள்'- செய்தியாளர் கேட்ட ஒரு கேள்வியால் டென்ஷனான பினராயி விஜயன் | Kerala cm pinarayi vijayan lashes out reporter

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (24/04/2019)

கடைசி தொடர்பு:13:40 (24/04/2019)

`அந்தப்பக்கம் தள்ளி நில்லுங்கள்'- செய்தியாளர் கேட்ட ஒரு கேள்வியால் டென்ஷனான பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவு வாக்கு பதிவு நடந்துள்ளது குறித்து கருத்து கேட்ட செய்தியாளர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் அந்தப்பக்கம் தள்ளி நில்லுங்கள் எனக்கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பினராயி விஜயன்


கேரள மாநிலத்தில் மூன்றாம் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. முந்தைய தேர்தல்களைவிட அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 74.04 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. நேற்று தேர்தலில் 77.68 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக கண்ணூர் தொகுதியில் 83.05 சதவிகிதம் வாக்குகளும், ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் 82.48 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஐந்து தொகுதிகளில் 80 சதவிகிதத்திற்கு அதிகம் வாக்கு பதிவாகியுள்ளது. கேரளத்தில் குறைந்த அளவாக தலைநகர் திருவனந்தபுரத்தில் 73.45 சதவிகிதம் வாக்கு பதிவாகியுள்ளது.

பினராயி விஜயன்

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சொந்த ஊரான கண்ணூரில் வாக்களித்துவிட்டு நேற்று இரவு எர்ணாகுளம் வந்தார். எர்ணாகுளம் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து இன்று காலை விமான நிலையத்திற்குப் புறப்பட்டார் பினராயி விஜயன். அப்போது வாசலில் நின்ற செய்தியாளர்கள் கேரளத்தில் அதிக அளவு வாக்கு பதிவாகியுள்ளது குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதிலளிக்காமல் ``அந்தப்பக்கம் தள்ளி நில்லுங்கள்" என டென்ஷனாகக் கூறியபடி காரில் ஏறிச் சென்றுவிட்டார். முதல்வரின் இந்தச் செய்கை கேரளத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏற்கெனவே திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை ``வெளியே செல்லுங்கள்" எனக்கூறியது கடந்த ஆண்டு சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.