`அரசியலுக்கு வாங்கன்னு கமல் கூப்பிட்டார்!' - முன்னாள் காவல்துறை அதிகாரி டெய்சி எர்னஸ்ட் | kamal sir called me to enter in to his party says retd police office daisy ernest

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (24/04/2019)

கடைசி தொடர்பு:18:20 (24/04/2019)

`அரசியலுக்கு வாங்கன்னு கமல் கூப்பிட்டார்!' - முன்னாள் காவல்துறை அதிகாரி டெய்சி எர்னஸ்ட்

ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியிலிருந்து, உடலளவில் பெருமளவு பாதிப்புகளைச் சந்தித்தவர் அனுஷியா டெய்சி எர்னஸ்ட். விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற இவர், `மக்கள் நீதி மய்யம்' கட்சியில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் அவரைத் தொடர்புகொண்டோம்.

அனுஷியா டெய்சி

``பணியில் இருந்து ஓய்வுபெற்று ஒரு வருஷம் ஆயிருச்சு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். எங்கள் ஊர் மக்களுடன் இணைந்து மரியாதை நிமித்தமாகக் கமல் சாரை பார்க்கப் போயிருந்தேன். என் நேர்மையான பணிகளைப் பற்றி, என் முன்னாள் அதிகாரிகள் மூலம் தெரிந்து, தன் கட்சியில் இணையவும், பிரசாரம் செய்யவும் அழைப்பு விடுத்தார். மக்களுக்குச் சேவை செய்ய இன்னொரு வாய்ப்பு கிடைச்சிருப்பது சந்தோஷமாக இருந்தாலும், ஆழமாக யோசிச்சு முறைப்படி கூடிய சீக்கிரம் தெரிவிப்பதாகச் சொல்லிருக்கேன். என்னுடைய நேர்மையை மக்கள் கூடிய விரைவில் அரசியலிலும் பார்ப்பாங்க. பெண்கள் நலம் சார்ந்து பாடுபடத் தயாராக இருக்கிறேன். முறைப்படி அறிவிப்புகளைக் கூடிய விரைவில் வெளியிடுவேன்" என்கிறார்