துரை தயாநிதியின் ரூ.40 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்! - அமலாக்கத் துறை நடவடிக்கை | ED attaches Durai dhayanithi's assets

வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (24/04/2019)

கடைசி தொடர்பு:18:01 (24/04/2019)

துரை தயாநிதியின் ரூ.40 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்! - அமலாக்கத் துறை நடவடிக்கை

துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது அழகிரி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழகிரி

2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் குவாரி மோசடிகள் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பி.ஆர்.பி உட்பட முக்கிய கிரானைட் புள்ளிகள் கைது செய்யப்பட்டார்கள். அன்று முதல் மதுரை மாவட்டத்தில் குவாரிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் மேலூர் பகுதியில் கிரானைட் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்த மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் மீது சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து அவர்களுடைய குவாரியும் சீல் வைக்கப்பட்டது. தற்போது அந்த வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

துரை தயாநிதி

அப்போது இதே குற்றச்சாட்டை விசாரித்து வந்த அமலாக்கத்துறை, துரை தயாநிதி மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், இன்று அவர் பெயரிலுள்ள சென்னை, மதுரையிலுள்ள 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியதாக அறிவித்துள்ளது. சமீபகாலமாக தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பி.ஜே.பியினரோடு நெருக்கம் காட்டி வந்த மு.க.அழகிரிக்கு அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை அளித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க