`மறியல்... தடியடி... கல்வீச்சு!' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை | Protest in Madurai over Ponnamaravathi issue

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (24/04/2019)

கடைசி தொடர்பு:20:40 (24/04/2019)

`மறியல்... தடியடி... கல்வீச்சு!' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை

நான்கு வழிச்சாலை போராட்டத்தில் தடியடி !

பொன்னமராவதி சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம் தொடர்பாக சாலை மறியல் செய்த நபர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

பொன்னமராவதி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினரை சிலர் தவறாக சித்திரித்து வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வெளியிட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்து, துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்ததோடு, பொன்னமராவதி காவல் நிலையத்தில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதில், போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டங்கள் பல இடங்களில் வெடித்தது. வீடியோ மூலம் அவதூறு பரபரப்பிய நபர்களைக் கைது செய்தபோதும் மேலும், சிலரைக் கைது செய்ய வேண்டும் என இன்று மதுரை மேலூர் பகுதியில் உள்ள சென்னை நான்குவழிச்சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் எடுத்துக்கூறியும் கூட்டம் கலையாமல் இருந்ததால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கற்களை வீச, அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவியது. இதில் காவல்துறையினர் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலைமை மோசமாகவும் மதுரை காவல்துறை எஸ்.பி மணிவண்ணன் மற்றும் மதுரை சரக டி.ஐ.ஜி பிரதீப் குமார்  ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனால் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


அதிகம் படித்தவை