சிவகங்கை அருகே முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி - பெண் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை! | life sentence for 6 persons Sivagangai court judgement

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (24/04/2019)

கடைசி தொடர்பு:22:30 (24/04/2019)

சிவகங்கை அருகே முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி - பெண் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை!

சிவகங்கை, முன் விரோதத்தில் பெண்ணைக் கொலை செய்ய முயன்றதாக 2 பெண் உட்பட 6 பேர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பளித்துள்ளார். 

நீதிமன்றம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் சோனைமுத்து. இவருடைய மகன்கள் கருப்பசாமி என்ற செந்தில் மற்றும் ஆனந்த். ஆனந்துக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆனந்த் அவரின் தந்தை சோனைமுத்து, தாயார் சேதுஅம்மாள் ஆகியோர் தாக்கியதில் முத்தையா இறந்துபோனார். இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு செட்டிக்குளத்தில் உள்ள கருப்பசாமி வீட்டில் இருந்த சேது அம்மாளை இறந்துபோன முத்தையாவின் மகன்கள் சோனையதேவன் (32), கருப்பசாமி (29) மற்றும் வி.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணுச்சாமி (37), வேலுார் கிராமத்தைச் சேர்ந்த வேங்கை (30) மற்றும் சித்ரா, ஆறுமுகம் அம்மாள் ஆகிய 6  பேர்கள் சேர்ந்து  ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த சேது அம்மாள் சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்தார்.இது தொடர்பாக சிப்காட் போலீஸார் 6 பேர்களை கைது செய்து அவர்கள் மீது சிவகங்கை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த தலைமைக் குற்றவியல் நீதிபதி ராதிகா குற்றம்சாட்டபட்ட 2 பெண்கள் உட்பட 6 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.1,250 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க