தந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை - பொன்னமராவதி சோகம்! | Youngster getting suicide because father scolding near pudukkottai

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (24/04/2019)

கடைசி தொடர்பு:08:37 (25/04/2019)

தந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை - பொன்னமராவதி சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், தந்தை திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி

பொன்னமராவதி ஜெ.ஜெ நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (46). ஆட்டோ ஓட்டுநர். இவரின் மகள் நிரஞ்சனா (14). பொன்னமராவதி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்த நிலையில், பால்காரரிடம் பால் வாங்கிவிட்டு நிரஞ்சனா சில்லறை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏன் சில்லறை வாங்கவில்லை என்று மணிகண்டன் நிரஞ்சனாவைத் திட்டியுள்ளார். தந்தை திட்டியதால் மனமுடைந்த நிரஞ்சனா, நீண்ட நேரம் தனிமையில் இருந்துள்ளார். தந்தை மற்றும் தாய் வீட்டைவிட்டு வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

உறவினர்கள்

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனே பொன்னமராவதி காவல் நிலையத்துக்குப் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன், மாணவியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.