`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி!'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி | m.o.p. vaishnav college for women gives a lakh rupees to gomathi marimuthu

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (25/04/2019)

கடைசி தொடர்பு:11:45 (25/04/2019)

`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி!'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி

தோஹாவில் நடந்து வரும் ஆசிய தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருடைய பெற்றிக்குப் பின் அவரைப் பாராட்டி பல பிரபலங்களும் பரிசுத்தொகை அறிவித்து வருவதைத் தொடர்ந்து,அவர் படித்த கல்லூரியான சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளனர். இது குறித்து கல்லூரியின் முதல்வர் லலிதா பாலகிருஷ்ணனிடம் பேசினோம்.

கோமதி மாரிமுத்து

 

``கோமதி எங்கள் கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்கு முன் பயின்றார். கல்லூரியில் பயிலும் போதே தடகளத்தில் பல பதக்கங்களை குவித்து கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர். தேசிய அளவில் பல பதக்கங்களைக் குவித்த பின்பும் கூட, தன் இயல்பு நிலை மாறாமல் இப்போதும் எங்கள் கல்லூரியின் விளையாட்டு பயிற்றுநர்களுடன் தொடர்பில் உள்ளார். கோமதி வறுமையால் பின் தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவருடைய தன்னம்பிக்கை ரொம்ப உறுதியானது என விளையாட்டுப் பயிற்றுநர்கள் கூறிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தத் தன்னம்பிக்கைதான் இன்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது. கோமதி எங்கள் கல்லூரியில் பயின்றதைப் பெருமையாக உணர்கிறேன். கோமதியின் சாதனையை பாராட்டும் விதமாகக் கல்லூரியிலிருந்து அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளோம். தன் அம்மாவுடன் நேரில் வந்து பரிசுத்தொகையைப் பெற்றுக்கொள்வதாகக் கோமதி எங்களிடம் தெரிவித்துள்ளார். எங்கள் கல்லூரியின் இத்தனை வருட வரலாற்றில் பரிசுத்தொகை அறிவித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அவருடைய சாதனை மற்ற மாணவிகளுக்கும் நிச்சயம் மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும். பெண்களின் சாதனை தொடரும்" என்கிறார்.


அதிகம் படித்தவை