``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா!''-நினைவுகளைப் பகிரும் நிரோஷா | actress nirosha talks about her father m.r.radha memories

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (26/04/2019)

கடைசி தொடர்பு:15:25 (26/04/2019)

``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா!''-நினைவுகளைப் பகிரும் நிரோஷா

நிரோஷா

`அக்னி நட்சத்திரம்' திரைப்படத்தில் அறிமுகமான நிரோஷா, குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகியாகப் புகழ்பெற்றார். சினிமா பயணத்தில் 31 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பவர், தன் தந்தை எம்.ஆர்.ராதாவின் நினைவுகள் குறித்துப் பேசுகிறார்.

நிரோஷா

``அப்பாவுக்கு எங்க வீட்டில் பெண் குழந்தைகள் மேலதான் அதிக அன்பு. அதிலும், என்மேல் அளவுகடந்த அன்பை வெச்சிருந்தார். அவர் வெளியூர், வெளியிடங்களுக்குப் போகும்போதெல்லாம் அவருக்கான மருந்து, மாத்திரைகள், பொருள்களையெல்லாம் நான்தான் ஆர்வமா தூக்கிட்டுப்போவேன். அவர் பட டயலாக்கை மழலை மொழியில் பிறர்கிட்ட சொல்லிச் சந்தோஷப்படுவேன். நான் தூங்கும்போது அப்பா என் கையில காசு வைப்பார். நான் தூங்கிய பிறகு எனக்குத் தெரியாம அண்ணனுங்க காசை எடுத்துட்டுப்போயிடுவாங்க. அப்பா தன் சினிமா விஷயங்களை வீட்டில் அதிகம் பேச மாட்டார். எங்களுக்கும், சினிமா ஆசை வேண்டாம்னு சொல்வார். ஆனா, `கிழக்கே போகும் ரயில்' பட முதல் நாள் ஷூட்டிங்கில் அப்பா கலந்துகிட்டார். அக்கா ராதிகாவுக்குப் பொட்டு வெச்சுவிட்டு, மனதார ஆசீர்வாதம் செய்திருக்கார். நானும் அக்காவும் சினிமாவில் புகழ்பெற்றதை அப்பா பார்த்திருந்தால், ரொம்பவே மகிழ்ச்சியடைந்திருப்பார். 'மிஸ் யூ டு த கோர் அப்பா'. நீங்க இருந்திருந்தால் எங்க வாழ்க்கையே வேற மாதிரி மாறியிருக்கும்" என நெகிழ்ச்சியாகக் கூறுகிறார், நிரோஷா.