`நான் இழந்ததைக் கோமதி மாரிமுத்து பிடிச்சிருக்கா..!' - தடகள வீராங்கனை சாந்தி #GoamthiMarimuthu | Athlet santhi shares her friendship with Gomathi Marimuthu

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (26/04/2019)

கடைசி தொடர்பு:17:55 (26/04/2019)

`நான் இழந்ததைக் கோமதி மாரிமுத்து பிடிச்சிருக்கா..!' - தடகள வீராங்கனை சாந்தி #GoamthiMarimuthu

தோஹா ஆசிய தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இவர் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரிடம் `உங்களுடைய ரோல் மாடல் யார்' என்ற கேள்விக்கு `சாந்தி அக்காதான் என் ரோல் மாடல். அவங்ககிட்ட பிராக்டீஸ் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா, முடியலை' எனக் கூறியிருந்தார். இது தொடர்பாக கோமதிக்கும், சாந்திக்கும் இடையே உள்ள நட்பு குறித்து தெரிந்துகொள்ள தடகள வீராங்கனை சாந்தியிடம் பேசினோம்.

கோமதி

``எனக்கு கோமதியை 2012-ல் இருந்து தெரியும். கோமதி தங்கம் வாங்கியிருப்பது ரொம்பவே சந்தோஷமான விஷயம். நான் இழந்ததை அவ பிடிச்சிருக்கா.. அப்படித்தான் நான் ஃபீல் பண்றேன். நான் ஆசிய மெடல் வாங்கினேன். அதை நம்மளுடைய இந்தியாவுக்காக அவ வாங்கியிருக்கா. முதன்முறையா நான் கோமதியை பெங்களூரில் பார்த்தேன். அப்போ நான் கோச்சிங் படிச்சிட்டு இருந்தேன். நாங்க ரெண்டு பேரும் ஒரே ஈவண்ட்டில் கலந்துகிட்டோம். ரொம்ப ஆர்வமா என்கிட்ட பேசுவா. எப்படி பண்ணலாம்.. என்ன பண்ணலாம்னு என்கிட்ட கேட்பா. நான் நிறைய விஷயங்கள் கோமதிக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதுமட்டுமல்லாமல் அவளுடைய லைஃப்ல நடந்த நிறைய விஷயங்கள் என்கிட்ட ஷேர் பண்ணியிருக்கா.

தடகள வீராங்கனை சாந்தி

அவ ரொம்ப கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்துருக்கான்னு நம்ம எல்லோருக்குமே தெரியும். அவ என்கிட்ட ஷேர் பண்ணினப்போ... பர்சனல் விஷயங்கள் உனக்குத் தடையா இருக்காது. உன்கிட்ட திறமை இருக்குன்னு அவளுக்கு உந்துதல் கொடுத்து சப்போர்ட் பண்ணியிருக்கேன். புதுக்கோட்டை சூர்யா சேம்பியனானதும் என்னைத்தான் ரோல் மாடல்னு சொன்னா. இப்போ இரண்டாவதா கோமதியும் என்னை ரோல் மாடல்னு சொன்னதும் ரொம்பவே எமோஷனல் ஆகிட்டேன். உண்மையை சொல்லணும்னா கண்ணீரே வந்துடுச்சு. கோமதிகிட்ட இருந்து இப்படியொரு வார்த்தையை நான் எதிர்பார்க்கலை. அந்தப் பொண்ணு இன்னும் நிறைய ஜெயிப்பா.. ஜெயிக்கணும்! இந்தியாவுக்காக அவ நிறைய மெடல் வாங்கணும்.. அதுக்காக நான் அவளைக் கண்டிப்பா சப்போர்ட் பண்ணுவேன்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை