குழந்தை கடத்தலில் ஈடுபட்ட மேலும் 3 புரோக்கர்கள் கைது! | namakkal nurse and other 3 arrested in baby theft case

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (28/04/2019)

கடைசி தொடர்பு:11:10 (28/04/2019)

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட மேலும் 3 புரோக்கர்கள் கைது!

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட மேலும் 3 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புரோக்கர்கள்

 நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், காட்டூர் காட்டுக்கொட்டாய் வள்ளியம்மாள் நகரைச் சேர்ந்தவர் அமுதவள்ளி.  குழந்தைகளை பெற்றோரிடமிருந்து சட்ட விரோதமாக வாங்கி விற்பனை செய்வதாக கடந்த 25-ம் தேதி தகவல் வெளியானதைத் தொடர்ந்து ரமேஷ்குமார் நாமக்கல் மாவட்ட சுகதாரத்துறை துணை இயக்குநர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக ,இராசிபுரம் டிஎஸ்பி  விஜயராகவன் தலைமையில் மூன்று தனிப்படைகளாக இயங்கி வந்த நிலையில், கூடுதலாக மூன்று தனிபபடைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இதுவரை அமுதவள்ளி மற்றும் அமுதவள்ளியின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். கொல்லிமலை செங்கரை பவர்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரியும் முருகேசன் என்பவர் புரோக்கராக செயல்பட்டு கொல்லிமலை பகுதிகளில் குழந்தைகளை வாங்கி தந்ததும், விற்பனை செய்ய ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன், அருள்சாமி, ஹசீனா ஆகியோர்கள்  துணை புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரியவந்தது. மேற்படி மூவரும் ஈரோடு, கோவை, வேலூர் ஆகிய இடங்களில் தனியார் செயற்கை கருத்தரிப்பு செய்யும் மருத்துவமனைகளில் குழந்தை இல்லாதவர்களுக்கு கருமுட்டை கொடுத்து அதற்கு பணம் ரூபாய் 12,000 முதல் 20,000 வரை பணமாக பெற்று வந்துள்ளனர்.

புரோக்கர்கள்

பின்னர், விதவை, கணவனால் கைவிடப்பட்ட பிரிந்து வாழும் வறுமையில் உள்ள தகுதி உள்ள பெண்களை கருமுடடை தானம் செய்ய அழைத்துச் சென்று புரோக்கர்களாக செயல்பட்டு அவ்வாறு கருமுட்டை தானம் செய்யும் ஒரு பெண்ணிற்கு கமிஷனாக ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை பெற்று வந்துள்ளனர். அக்காலகட்டத்தில் செயற்கை கருவூட்டல் சிகிச்சை முறையில் குழந்தை பிறக்காது என தெரிந்த தம்பதியினரிடம் நட்பு ஏற்பட்டு குழந்தைகளை வாங்கித் தருவதாக கூறிவந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் பின்னர் குழந்தைகளை விற்பதற்கு துணை புரோக்கர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். 

புரோக்கர்கள்

  துணை புரோக்கர்கள் பர்வீன், அருள்சாமி மற்றும் ஹசீனா ஆகியோர்களை தனிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மேற்கண்ட மூவரும் பல சப்-புரோக்கர்களிடமும், உறவினர்களிடமிருந்தும் குழந்தைகளை பெற்று கொடுத்துள்ளனர். இவர்கள் மூலம் சுமார் 12 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது. இதில் ஒரு குழந்தை கொல்லிமலையில் பெறப்பட்டு, தென்மாவட்டம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது. அப்போது குழந்தை தத்து ஆவணம் என அரசின் உரிய அனுமதியின்றி வாங்கும் பெற்றோர் மற்றும் தத்து கொடுக்கும் பெற்றோர் கையொப்பத்துடன் புகைப்படம் ஒட்டி நோட்டரி வழங்கறிஞர் ஊ.வெங்கடாஜலம், சின்ன முதலைப்பட்டி, நாமக்கல் முன்னிலையில் கையொப்பம் பெற்று, ஆவணம் செய்திருப்பதும், இதற்கு நாமக்கல் வழங்கறிஞர் லோகேஷ் என்பவர் உடந்தையாக இருந்ததும், புரோக்கர் அருள்சாமியின் வாக்குமூலத்தின் படி அவரிடமிருந்து மேற்படி பத்திர நகல் கைப்பற்றப்பட்டது.  மேற்படி வழக்கறிஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். மேலும், குழந்தை விற்பனை செய்த மற்றும் வாங்கிய பெற்றோர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், மற்ற இடைத்தரகர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளபடுமென நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.

புரோக்கர்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க