ஒரு பெண் உட்பட163 இளைஞர்கள்... விதவிதமான போதை வஸ்துகள்!- பொள்ளாச்சி சொகுசு விடுதியால் மிரண்ட எஸ்.பி. | Around 160 students arrested because of using drugs

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (04/05/2019)

கடைசி தொடர்பு:09:02 (06/05/2019)

ஒரு பெண் உட்பட163 இளைஞர்கள்... விதவிதமான போதை வஸ்துகள்!- பொள்ளாச்சி சொகுசு விடுதியால் மிரண்ட எஸ்.பி.

பொள்ளாச்சி போதை பயங்கரம் 163 இளைஞர்கள் கைது

பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடைப் பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் 163 இளைஞர்கள் விதவிதமான போதை வஸ்துகளை உட்கொண்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள சேத்துமடை அண்ணா நகர் பகுதியில் கணேஷ் என்பவரது தோட்டத்தில்  `அக்ரி நெஸ்ட்' என்ற சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கே அப்படி ஒரு சொகுசு விடுதி இருக்கிறது என்பதே சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குத் தெரியாத அளவுக்கு இருந்துள்ளது. ஆன்-லைன் புக்கிங் மூலம் அந்த சொகுசு விடுதியைக் கண்டடைந்து ஏராளமான இளசுகள் குத்தாட்டம், கும்மாளம் போடுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. 

பொள்ளாச்சி போதை பயங்கரம் 163 இளைஞர்கள் கைது

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விதவிதமான போதை வஸ்துகளை உட்கொண்டுவிட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தத்  தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சிலர், இதுகுறித்து ஆனைமலை போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த ஆனைமலை போலீஸார், அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்த போதை நிலையைக் கண்டு அதிர்ந்து போனார்கள். அவர்கள் உடனடியாக கோவை எஸ்.பி சுஜித்குமாருக்கு தகவல் அளித்தனர்.

பொள்ளாச்சி போதை பயங்கரம் 163 இளைஞர்கள் கைது

விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த எஸ்.பி உடனடியாக தனது தலைமையில் ஒரு குழுவை அழைத்துக்கொண்டு இரவே சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு ரகளை செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். அதன்பின் என்ன நடந்தது என்று கோவை எஸ்.பி.சுஜித்குமாரிடம் பேசினோம். ``அங்கே கண்ட காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. ஒரு பெண் உட்பட மொத்தம் 163 இளைஞர்கள். அவர்களில் 120-க்கும் மேற்பட்டவர்கள் கேரள இளைஞர்கள், 40-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் பெரும்பாலானோர் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்றுகொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு எப்படி இவ்வளவு  போதை வஸ்துகள் கிடைத்தது என்பதுதான் எங்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. 

பொள்ளாச்சி போதை பயங்கரம் 163 இளைஞர்கள் கைது

அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம். அந்த சொகுசு விடுதியின் உரிமையாளரையும் கைது செய்திருக்கிறோம். எப்படி இவர்களுக்கு போதை வஸ்துகள் கிடைத்தது, இவர்கள் எவ்வளவு நாள்களாக இங்கு வருகிறார்கள், இதன் பின்னணியில் வேறு ஏதாவது குற்றங்கள் நடக்கிறதா? என்கிற கோணத்திலெல்லாம் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றவர் எதிர்கால நம்பிக்கையான இளைஞர்கள், `ஜாலி' என்ற பெயரில் இப்படி தடம் மாறிச் செல்வது மிகவும் வருத்தமளிக்கிறது" என்றார் வேதனையோடு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க