காடுகளுக்கு நடுவே த்ரில் படகு சவாரி... ராம்நாடு சில்லிங் ஸ்பாட்! #MyVikatan | tourist place at ramanathapuram

வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (06/05/2019)

கடைசி தொடர்பு:11:54 (10/05/2019)

காடுகளுக்கு நடுவே த்ரில் படகு சவாரி... ராம்நாடு சில்லிங் ஸ்பாட்! #MyVikatan

பிச்சாவரம் ஏரியைச் சுற்றிக் கிடக்கும் மாங்குரோவ் மரங்களுக்கு இடையே படகு சவாரி செல்வது தனி அலாதியை ஏற்படுத்தும். அதைப்போல ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது, காரங்காடு மாங்ரோவ் காடுகளுக்கு இடையேயான கடல் பகுதி. 

காரங்காடு

 ராமநாதபுரத்திலிருந்து தொண்டி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், மணக்குடி என்ற ஊரில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கிளைச்சாலையில் சென்றால் வருவது, காரங்காடு கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள தேவாலயத்தின் அருகில் அமைந்துள்ளது, வனத்துறையினரின் படகு குழாம்.

கரங்காடு

இங்கிருந்து, சுமார் 3 கி.மீ  தூரம் படகில் பயணிப்பதன்மூலம், கடற்கரையோரம் அடர்ந்த மாங்குரோவ் காடுகளையும் அதன் ஊடே அமர்ந்து திரியும் பல வகையான பறவை இனங்களையும், கடல் வாழ் உயிரினங்களையும் கண்டு ரசிக்கலாம். இவற்றுடன்,  கடலில் வளரும் அரியவகை புற்கள் உள்ளிட்ட தாவரங்களை சிறப்புக் கண்ணாடி அணிந்து கண்டு ரசிக்கலாம். முன்பதிவு செய்தால், உணவு ஏற்பாட்டினையும் வனத்துறையினர் செய்துதருகின்றனர். 

கரங்காடு

 மனம் கவரும் இந்தப் படகுப் பயணத்திற்குக் கட்டணமாக, பெரியவர்களுக்கு ரூ.100 -ம், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ரூ.50-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.