2000 ஆண்டுகள் வணிகத்தில் கொடிக்கட்டி பறந்த `அரிக்கன் மேடு’! - புதுச்சேரி ஹைலைட்ஸ் #MyVikatan | Arikamedu at Pondicherry

வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (06/05/2019)

கடைசி தொடர்பு:11:58 (10/05/2019)

2000 ஆண்டுகள் வணிகத்தில் கொடிக்கட்டி பறந்த `அரிக்கன் மேடு’! - புதுச்சேரி ஹைலைட்ஸ் #MyVikatan

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் பூமிக்கடியில் புதைந்துள்ள வணிக ஸ்தலம்தான் அரிக்கன்மேடு. சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை பூமிக்கடியில் புதைந்துள்ளதாக கருதப்படும் அரிக்கமேட்டில் 21 ஏக்கர் பகுதி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் பாதுகாப்பில் உள்ளது.

அரிக்கன்மேடு

1940 ம் ஆண்டு மரம் நடத் தோண்டும் போது பூமிக்கடியில் பழங்கால மண் ஜாடிகள், மற்றும் மட்பாண்டங்கள் கிடைக்கவே அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பின்னர் 1944 ம் ஆண்டு வெளிநாட்டு அகழ்வாராய்ச்சியாளர் மார்ட்டின் வீலர் தலைமையில் அகழ்வாய்வு நடத்தப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின்படி கி.மு 200 முதல் கிபி 200 வரை 2000 ஆண்டுகளுக்கு முன்பு இங்குக் கிரேக்க ரோமானியர்கள் வணிகம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.  பண்ட மாற்று முறை வணிகமும், ஏற்றுமதி இறக்குமதி வணிகமும் இங்குப் பெரிய அளவில் நடந்துள்ளன.

அரிக்கன்மேடு

வணிகர்கள்,  விருந்தினர்களை மகிழ்விக்கக் கூர் முனை மது ஜாடிகளைப் பயன்படுத்தி மது வழங்கியுள்ளனர். பல வண்ண மணிகள், படிக மணிகள், கோமேதககல் எனப் பல அரியப் பொருட்களை அகழ்வாய்வில் கண்டெடுத்துள்ளனர். மேலும் இங்கு வண்ணம் தயாரிக்கும் உரை கிணறு உள்ளதால் ரோமானியர் இங்குத் துணி நெய்தல், மட்பாண்டங்கள் செய்தல், பல வண்ண மணிகளைக் கோர்த்து வண்ணம் தீட்டி கலைப் பொருட்களை உருவாக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். இங்கு கிளிஞ்சில்கள், சங்குகளால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. கிமு 200 ல் வாழ்ந்த ரோமப்பேரரசர் அகஸ்டஸ் தலை பொறித்த தங்க மற்றும் செப்பு காசுகளும் கண்டெடுக்கப்பட்டன.

இவ்வாறாக 2000 ஆண்டுகளுக்கு வணிகத்தில் சிறந்து விளங்கிய அரிக்கமேடு பகுதியில் ஆலய கட்டிடத்தின் சிதைந்த சுவர் பகுதி மட்டும் நினைவுச் சின்னங்களாக உள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க