அட இதுதான் அந்த `மிதக்கும் கல்’ ரகசியமா! - ராம்நாடு ட்ரெண்ட்ஸ் #MyVikatan | pavala parai becoming trend in rameshwaram

வெளியிடப்பட்ட நேரம்: 13:58 (06/05/2019)

கடைசி தொடர்பு:11:57 (10/05/2019)

அட இதுதான் அந்த `மிதக்கும் கல்’ ரகசியமா! - ராம்நாடு ட்ரெண்ட்ஸ் #MyVikatan

பவளப்பாறை

கடலால் சூழப்பட்ட ராமேஸ்வரம் தீவினை இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பதில் முன்னணி வகிப்பது பவளப் பாறைகள் ஆகும். நெருங்கும் தூரத்தில் உள்ள இலங்கை கடற்பரப்பில் உருவாகும் பெரும் புயல்களில் ராமேஸ்வரம் தீவு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இப்பகுதியில் பரவியிருக்கும் பவளப் பாறைகள் உதவி வருகின்றன. இதனால் இவற்றை எடுக்கவும், விற்கவும் தடை உள்ளது. 

பவளப்பாறை

இந்நிலையில் சீதையை மீட்கச் சென்ற ராமர் இத்தகைய பவளப் பாறைகளை கொண்டே இலங்கைக்குப் பாலம் அமைத்ததாக ஆன்மிகவாதிகளால் நம்பப்படுகிறது. ஆனால் இந்த நம்பிக்கையை தங்களின் வியாபாரத்திற்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு செயல்படும் சிலர் பைப் கோரல் எனப்படும் ஒரு வகையான பவளப் பாறைகளை விற்பனை செய்து வருகின்றனர். இவற்றில் உள்ள  பைப் போன்ற துளைகளால் அவை தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது என்பது அறிவியல் ரீதியான உண்மை. ஆனால் இவற்றை மறைத்து விட்டு பக்தியின் பெயரில் பவளப் பாறைகளுக்கு  'மிதக்கும் கல்' என்ற பெயர் சூட்டி பக்தர்களின் பாக்கெட்டில் கை வைத்து விடுகின்றனர்.