இவர்களின் வேண்டுதலுக்கு வயது 300 - விநோத கோயிலும் சுவாரஸ்ய பின்னணியும் #கமுதி #MyVikatan | Villagers around Kamuthi performing peculiar rituals

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (06/05/2019)

கடைசி தொடர்பு:11:55 (10/05/2019)

இவர்களின் வேண்டுதலுக்கு வயது 300 - விநோத கோயிலும் சுவாரஸ்ய பின்னணியும் #கமுதி #MyVikatan

கமுதியில் உள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சுற்றுவட்டாரப் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் விழா 22 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த நாள்களில் வீடுகளில் மட்டுமல்லாது கமுதி பகுதியில் உள்ள ஹோட்டல்களிலும்கூடச் சைவ உணவே கிடைக்கும். இந்தத் திருவிழாவில் பக்தர்கள் விநோத வேண்டுதல் ஒன்றைக் கடைப்பிடித்து வருகின்றனர். பங்குனி பொங்கல் நாளன்று கமுதி பேருந்து நிலையம் அருகே உள்ள செட்டி ஊரணிக்குச் செல்லும் பக்தர்கள் அந்த ஊரணியில் உள்ள சேற்று மணலை எடுத்து தங்கள் உடல் முழுவதும் பூசிக்கொண்டு முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

கமுதி

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ வசதி ஏதும் இல்லாத நிலையில் அம்மை நோயிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இது போன்ற வேண்டுதலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மருத்துவ வசதிகள் வளர்ந்த நிலையிலும்கூட தங்கள் முன்னோர்கள் பாரம்பார்யமாகக் கடைப்பிடித்து வந்த இந்த சேத்தாண்டி வேண்டுதலை இன்றும் கைவிடாமல் கடைப்பிடித்து வருகின்றன. இந்த விநோத வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகக் கமுதி பகுதிக்ச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.