ஒரு வருஷத்துக்கு 1000 மனுக்கள்..  77 வயது முதியவரின் சேவைக்கு Hats Off! #MyVikatan  | This Nagercoil old man amazing everyone

வெளியிடப்பட்ட நேரம்: 19:47 (06/05/2019)

கடைசி தொடர்பு:12:10 (10/05/2019)

ஒரு வருஷத்துக்கு 1000 மனுக்கள்..  77 வயது முதியவரின் சேவைக்கு Hats Off! #MyVikatan 

மனுகொடுப்பதே மக்கள் சேவைதான் என நினைத்து வாழ்ந்துவருபவர் 77 வயதான முகைதீன் ஷாகுல் ஹமீது. 

ஷாகுல் ஹமீது
 

முகைதீன் ஷாகுல் ஹமீது நாகர்கோவிலை அடுத்த மாதவலாயத்தைச் சேர்ந்தவர். திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தாலும், நடக்காவிட்டாலும் 77 வயதான முகமது ஷாகுல் ஹமீது ஐந்தாறு மனுக்களுடன் ஆஜராகியிருப்பார். இந்த ஒரு ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை ஆட்சியரிடம் சமர்ப்பித்திருக்கிறார். மக்கள் குறைதீர்க்கும் நாளை நிறைவு செய்துவைப்பதே ஷாகுல்ஹமீதின் மனுக்கள்தான். பத்திரிகையில் போடுகிறார்களோ இல்லையோ கலெக்டரிடம் கொடுக்கும் மனுக்களை ஜெராக்ஸ் எடுத்து அனைவரிடமும் கொடுத்து விடுவார். ஜெராக்ஸ் எடுக்க செலவு அதிகமாகிவிட்டதால் இப்போது டிஜிட்டல் வசதியை பயன்படுத்திக்கொள்கிறார். ஒவ்வொரு செய்தியாளர்களிடமும் மனுக்களைக் காட்டி இதை செல்போனில் போட்டோ எடுத்து பேப்பரில் போடுங்கள் என்று சிரிக்காமல் சொல்லுவார்.

``நான் சமூக சேவை செய்ததால் எனது பெயரில் எம்.எஸ்.ஹெச். நகர் உருவாக்கி ஏழைமக்கள் குடியிருக்கிறார்கள். எம்.எஸ்.ஹெச். நற்பணி மன்றம்கூட வைத்திருக்கிறார்கள். சமூக சேவகராக பிஸ்டல் லைசென்ஸ் நான் மட்டும்தான் வாங்கியிருக்கிறேன். எனது சமூக சேவைகள் பற்றி புத்தகம் வெளியிடலாம் என இருக்கிறேன்" என்கிறார்.