இனி கிருஷ்ணகிரியை முக்கனிகளின் தேசம் என்று அழைக்கலாம்! ஏன் தெரியுமா? #MyVikatan | Now Krishnagiri as new  Identity

வெளியிடப்பட்ட நேரம்: 19:47 (06/05/2019)

கடைசி தொடர்பு:12:11 (10/05/2019)

இனி கிருஷ்ணகிரியை முக்கனிகளின் தேசம் என்று அழைக்கலாம்! ஏன் தெரியுமா? #MyVikatan

தமிழகத்தில் கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி முக்கனிகளை விளைவிக்கும் மாவட்டமாக புதிய அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றது.

மா
 

தமிழகத்தில் ஆண்டுதோறும் 1.20 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மா உற்பத்தி செய்யப்படுகின்றது. அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 40 சதவிகிதம், அதாவது 36,000 ஹெக்டேர் அளவுக்கு மா உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மா உற்பத்தியில் மொத்தம் 66 வகையான மாம்பழங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வகை மாம்பழங்களை அரபு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் பெரும் வருவாயை மா ஈட்டித் தருகின்றது.

வாழை 
 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 81 கி.மீட்டர் பாய்ந்து செல்லும் தென்பெண்ணை ஆற்றின் நீர் வளத்தால், ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் 800 ஹெக்டேர் அளவுக்கு வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக இலக்கி, பச்சை வாழை வகை வாழைப்பழத்தை உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் வாழைப் பழங்களுக்கு பெங்களூரு மற்றும் தமிழக சந்தையில் அதிகப்படியான வரவேற்பைப் பெற்றுள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பலா
 

தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் பலா உற்பத்தி செய்ய ஏற்ற இடமாகவும், இங்கு விளையும் பலா அதிக சுவை கொண்டதாக இருப்பதால், பலா உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி ஊக்குவித்து வருகின்றனர் வேளாண் அதிகாரிகள். குறிப்பாக பெட்டமுகிலாளம் மலைக் கிராமத்தில் அதிகளவு பலா உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
இதனால் முக்கனிகளை விளைவிக்கும் மாவட்டமாகக் கிருஷ்ணகிரி மாறிவருகின்றது.