இரவில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் தஞ்சைப் பெரிய கோயில்! - காரணமானவரைக் கொஞ்சம் பாராட்டலாமே #MyVikatan | A Person behind  the lighting effects of Thanjavur temple 

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (07/05/2019)

கடைசி தொடர்பு:12:12 (10/05/2019)

இரவில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் தஞ்சைப் பெரிய கோயில்! - காரணமானவரைக் கொஞ்சம் பாராட்டலாமே #MyVikatan

மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரியகோயில், 1000 ஆண்டுகளைக் கடந்து, உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி  கம்பீரமாக நின்று காட்சியளிக்கிறது. மேலும், உலகப் பாரம்பர்யச் சின்னங்களில் ஒன்றாகவும், சோழர்களின் கட்டடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.

தஞ்சை பெரியக் கோயில்

தஞ்சைப் பெரியகோயிலுக்கு  வரும் சுற்றுலாப் பயணிகள், கோயில் கட்டுமானத்தையும் பிரமாண்ட கலை நேர்த்தியையும் கண்டு அதிசயிக்கின்றனர்.குறிப்பாக, ஒரே கல்லினால் ஆன பெரியகோயிலின் விமான கோபுரத்தைக் கண்டு, 'எப்படி இந்தக் கல்லை மேலே எடுத்துச்சென்றிருப்பார்கள்' என ஆச்சர்யம் விலகாமல் இன்றளவும் பேசிவருகின்றனர். அந்த உயர்ந்த கோபுரத்தில் எரியும் மின் விளக்கு ஒன்று, இரவு நேரத்தில் கோயிலின் மேல் பட்டுத் தெறிக்க, தங்க நிறத்தில் ஜொலிக்கும் கோயிலைக் காண்பதற்கே கண் கோடி வேண்டும்.

சிவாஜி

கோயிலுக்கு வரும் எல்லோரும், எப்படி விமானத்தின் மேல் பல்பை பொருத்துவார்கள் என்ற கேள்வி எழும். கோயில் ஊழியரான சிவாஜி,தொல்லியல் துறை ஊழியரான ஜெயசீலன் ஆகிய இருவரும், எல்லோரும் வியக்கும் அந்த மின் விளக்கைப் பொருத்தும் பணியைச் செய்துவருகின்றனர். இதுகுறித்து கோயில் வட்டாரத்தில் விசாரித்தோம். இரவு நேரத்தில், கோபுரத்தின் உச்சியில் எரியும் மின் விளக்கு, கோயிலைத் தங்க நிறத்தில் மின்னவைக்கும். அந்த பல்பு எரியாமல் இருந்தாலோ அல்லது புதிய பல்பு மாற்ற வேண்டும் என்றாலோ, கோயிலில் எலெக்ட்ரீஷியனாக இருக்கும் சிவாஜி தான் செய்வார்.  அவர் இந்தப் பணியைத் திறம்பட செய்வார்.படிகள் வழியாக கோயிலின் தளத்திற்குச் சென்று, அதன்பிறகு விமானத்தின்மீது ஏறி பல்பை மாற்ற வேண்டும். இதற்காக, பெருவுடையாரை நினைத்து விரதம் இருந்து, பயபக்தியுடன் ஏறி பல்பை மாற்றிவிட்டு இறங்குவது அவர் வழக்கம். அவர் கீழே இறங்கி வந்ததும், எல்லோரும் அவரை ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள்.

'' 'ராஜராஜ சோழன் கட்டிய கோயிலில் நான் இந்தப் பணியைச் செய்வதை பாக்கியமாக நினைக்கிறேன்' என அந்தச் சமயத்தில் உருகுவார். மேலே இருந்து பார்க்கும்போது எல்லாம் துளியாகத் தெரியும். ஒரு பயமும் படபடப்பும் உண்டாகும். அந்த நேரத்தில், நான் ராஜராஜசோழனை நினைத்துக்கொள்வேன். பின்னர், என்னை அறியாமல் எனக்குள் ஒரு கம்பீரம் வந்து, என்னை வழி நடத்தும்' எனப் பரவசத்தோடு சிலாகிப்பார். அவர் சொல்வதைக் கேட்கவே எங்களுக்கு உற்சாகமாக இருக்கும். இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், கடந்த சில வருடங்களாக அவர் ஏறுவதில்லை. தொல்லியல் துறையைச் சேர்ந்த ஜெயசீலன்தான் இந்தப் பணிந்த் தொடர்கிறார்'' என்று தெரிவித்தனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க