குழந்தைகள்கூட அழமாட்டார்கள்! - ஆச்சர்யமூட்டும் மண்டைக்காடு பகவதி அம்மன் நிசப்த பூஜை #MyVikatan  | Midnight Silent rituals at Kanyakumari bhagavathi amman temple

வெளியிடப்பட்ட நேரம்: 11:58 (07/05/2019)

கடைசி தொடர்பு:12:10 (10/05/2019)

குழந்தைகள்கூட அழமாட்டார்கள்! - ஆச்சர்யமூட்டும் மண்டைக்காடு பகவதி அம்மன் நிசப்த பூஜை #MyVikatan 

கன்னியாகுமரியில், நடுநிசி வேளையில் ஆண்டுதோறும் நடக்கிறது ஒடுக்குபூஜை. ஒடுக்கு பூஜை என்பது, அம்மனுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி. 

பகவதி அம்மன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், மாசி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை மாசிக் கொடைவிழா நிறைவுபெறும்.  மாசிக் கொடைவிழாவின் நிறைவு நாளன்று, நள்ளிரவு 12 மணிக்கு இந்த ஒடுக்கு பூஜை நடக்கும். இந்தப் பூஜைக்காக, அருகில் உள்ள சாஸ்தா கோயிலில் உணவுப் பதார்த்தங்களைத் தயாரித்து, நீளமான வெள்ளைத் துணியில் மூடி கோயில் குருக்கள்மார் ஊர்வலமாக எடுத்துவருவார்கள். அப்போது, லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தாலும் சின்ன சத்தம்கூட கேட்காது.
 
கூட்டத்தில் இருக்கும் குழந்தைகள், அந்தச் சமயத்தில் அழமாட்டார்கள். குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாக நடக்கும் நள்ளிரவு பூஜை, ஆண்டுதோறும் நடக்கும் அதிசயம். சபரிமலைக்கு விரதமிருந்து, இருமுடி கட்டிச்  செல்வதுபோன்று கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடிகட்டி இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். இதனால், பெண்களின் சபரிமலை என்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அழைக்கப்படுகிறது. இங்கு, சுயம்புவாகத் தோன்றிய அம்மன் புற்று வடிவில் காட்சி அளிக்கிறார்.