``தி.மு.க வோடு சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம்!" − தங்கதமிழ்ச்செல்வன் அதிரடி | Let's dissolve government with DMK

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (07/05/2019)

கடைசி தொடர்பு:13:35 (07/05/2019)

``தி.மு.க வோடு சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம்!" − தங்கதமிழ்ச்செல்வன் அதிரடி

ஆண்டிபட்டி அ.ம.மு.க அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் பணம் கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்ட அ.ம.மு.க'வைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வம் நேற்று கைது செய்யப்பட்டார். தேனி சிறையில் உள்ள செல்வத்தைச் சந்திக்க தங்கதமிழ்ச்செல்வன் திருப்பரங்குன்றத்திலிருந்து இன்று வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

``திட்டமிட்டு சூழ்ச்சி செய்து ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. அதில் செல்வம் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை ஜாமினில் வெளியே எடுத்து இந்த வழக்கை சட்டரீதியாகச் சந்திப்போம். அ.ம.மு.க., தி.மு.க'வின் B டீம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். அப்படி நாங்கள் Bடீம் என்றால், நாங்கள் ஏன் தேர்தலில் தனித்து நிற்கப்போகிறோம். தி.மு.க'வோடு கூட்டணி சேர்ந்து தேர்தலில் நின்றிருக்க மாட்டோமா?" என்று பேசிய தங்கதமிழ்ச்செல்வன்,

தங்கதமிழ்ச்செல்வன்

``நடக்கும் அ.தி.மு.க ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர 35 எம்.எல்.ஏ'க்கள் தேவை. இந்தத் தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க'வோடு சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம். தி.மு.க இதற்கு ஆதரவு தரவில்லை என்றால் அவர்கள் எங்களை பார்த்து பயப்படுவதாக அர்த்தம்" என்றார். ஆட்சியமைக்க தி.மு.க'விற்கு ஆதரவு கொடுப்பீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டதற்கு "இல்லை.!" என பதிலளித்தார் தங்கதமிழ்ச்செல்வன்.