`ஊர்வசி மேம் கூட நடிக்கிறப்ப என்னால சிரிப்பை அடக்க முடியலை!' - 'திருமணம்' ஸ்ரேயா நெகிழ்ச்சி | thirumanam serial fame shreya talks about urvasi

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (07/05/2019)

கடைசி தொடர்பு:14:35 (07/05/2019)

`ஊர்வசி மேம் கூட நடிக்கிறப்ப என்னால சிரிப்பை அடக்க முடியலை!' - 'திருமணம்' ஸ்ரேயா நெகிழ்ச்சி

லர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் 'திருமணம்'. இந்த சீரியல், தற்போது 150-வது எபிசோடுகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், இந்த சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார், நடிகை ஊர்வசி. இதுகுறித்து கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள 'திருமணம்' சீரியல் ஹீரோயின் ஸ்ரேயாவிடம் பேசினோம். 

ஊர்வசி

``ஊர்வசி மேம் வரப்போறாங்கன்னு தெரிஞ்சதுமே ரொம்பவே ஹேப்பியா இருந்துச்சு. அவ்வளவு பெரிய புகழ்பெற்ற நடிகை நம்மகூட சேர்ந்து நடிக்கப்போறாங்கன்னு ரொம்பப் பெருமையா இருந்துச்சு. முதல் நாள் ஷூட்ல அவங்ககூட பேசும்போது என்னால சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியலை. இயற்கையாகவே அவங்களுக்கு நல்ல ஹியூமர். ஷூட்டிங் முழுக்க சிரிச்சிட்டேதான் இருந்தேன். அந்த கேரக்டருக்குள்ள அப்படியே செட்டாகிடுவாங்க. ஃபேஷியல் எக்ஸ்பிரஷன்ஸ், டைமிங்ன்னு எல்லாத்தையுமே அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.  இப்போகூட, முன்னாடி இருந்த அதே அழகோட இருக்காங்க. ஷூட்டிங் நடந்தப்போ அவங்களுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதையும் பொருட்படுத்தாம சூப்பரா நடிச்சாங்க" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க